என் காதல் - போட்டிக் கவிதை - தேன்மொழி

என் காதல் - போட்டிக் கவிதை - தேன்மொழி
--------------------------------------------------------------------

பொழியும் மழையில் புடவை நனைய
தேகம் சிலிர்த்தும் மேகத்தை அழைத்து
புதுமொழி பேசும் புன்னகையில்
எந்தன் காதல் - மெல்ல சிரித்ததடி ..!

உறவின் தேடல் அன்பினை மறக்க
ஊமையான இதயம் வலியால் சிதற
மூழ்கும் துகளின் நுனியில்
எந்தன் காதல் - வாழத் துடிக்குதடி ..!

புத்தம்புது பூமியில் பூமகளாய் நான்பிறக்க
எல்லாம் கொடுத்து என்னுயிர் காக்கும்
அன்னை தந்தை ஆசையில்
எந்தன் காதல் - முழுதாய் நிலைக்குமடி ..!

மலராத மொட்டுகளின் முகத்தில் முத்தமிட
வறண்ட புழுதியில் வந்துவிட்ட தென்றலாய்
கூந்தல் பூவின் வாசத்தில்
எந்தன் காதல் - வாடாமல் மலருதடி ..!

மஞ்சள் நிறத்தில் வளையல் சிணுங்க
கொலுசின் ஓசையே கொஞ்சும் குரலாக
எல்லாம் மறந்த மழலையாய்
எந்தன் காதல் - என்னுள் திட்டுதடி ..!

இரவின் குளிரில் போர்வை அணைக்க
நேற்றைய கனவின் மிச்சத்தை மிட்டும்
இருவிழியின் இமைக்குள் இதமாய்
எந்தன் காதல் - மெதுவாய் அசையுதடி ..!

மெல்லிசை ரசிப்பில் இதயம் மிதக்க
வானம் முழுக்க நிலவாய் பறந்து
பனித்துளி தூவும் பதுமையாய்
எந்தன் காதல் - காற்றில் கலக்குதடி ..!

மௌனமே உறவாட விழிகளின் விசும்பல்
உயிரோடு கலந்து உணர்வோடு பேசும்
என்னவன் கவிதை வரிதனில்
எந்தன் காதல் - புதிதாய் துளிர்க்குதடி

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (16-Nov-14, 11:24 am)
பார்வை : 140

மேலே