அன்போடு இருங்கள்
விழியோடு விழி இங்கு உறவாடும் போது
விழி காண மதம் மீது உரையாடல் ஏனோ
வெறும் காற்று இசை ஆகட்டும்
விண்மீன்கள் மண் மீது விதை ஆகட்டும்!!
மரத்தோடும் மலையோடும் மனம் பேசும் ஓசை
மண் தீங்கும் மனிதா ,ஏன் மண் மீது ஆசை
மனிதா உன் மனம் மாறட்டும்
உலகம் உன் வாழ்வால் உருமாறட்டும்!
பிறந்தாய் நீ அறிந்தா?வெறும் கைகளோடு ..
இறப்பாய் நீ தெரிந்தா?எதை கொண்டு உன்னோடு
இருக்கும் நாள் சிறக்கட்டுமே ..
உன் ஈகை ..இமயம் போல் இருக்கட்டுமே !
வாழ்நாளோ ஒருநாள்தான் ஆனாலும் என்ன?
தன ரத்த தேனை வண்டுக்கும் தந்து ..
உயிர் விட்டு போனால் என்ன ?
பூக்கள் மனம் வீசி தான் போகுதே ..
யுத்தத்தின் சத்தத்தில் வாழ்ந்த நாள் போதும் ..
மனிதத்தின் மாண்பை மதம் மூடி மாயும்
இருள் நாட்கள் இனி தேயட்டும்
பூமி மலர் மீது துயில் கொள்ளட்டும்!!

