அழகழகாய் சித்திரங்கள்

அழகழகாய் சித்திரங்கள்
காலை முதல் மாலை வரை
வரைந்திட்ட இயற்கைகளை
களித்திடுமே எம் கண்கள்!!

மேகப் போர்வைக்குள் வானமகள்
பனிப்போர்வைக்குள் பூமி மகள்
தூங்கிடாமல் விளையாடும்
இயற்கைக் குழந்தைகள் அவை!!

கடலலைகள் ஓசையிட
காதலன் காற்றின் வருடலிலே
கல கலவென ஒலி எழுப்பி
சிரித்திடுமே நட்ட மர நாணல்கள்!!

பஞ்சு போன்ற முகில் கூட்டம்
வரைந்திட்ட சித்திரங்கள்
கனப் பொழுதில் மாறிடுமே
பல நூறு வடிவங்கள்!!

சோலை வனக் காடுகளும்
பாலைவனக் திட்டுக்களும்
விரிந்திட்ட நிலக் கடதாசியிலே
அவன் வரைந்த அதிசய ஓவியங்கள்!!

பார்ப்போர் கண்கள் அகல விரிந்திட
அச்சமது மனது கொண்டிட
பரவசமாய் மனதை கவர்ந்திடும்
மலை முகடும் சாரல்களும்!!

தூங்கிடாது ஓய்வின்றி துலங்கிடும்
தனி உலகம் ஆழிக்கடலுலகம்
கடலலைகள் உயர்ந்தெழுந்து
தன் பெருமை தொடர்ந்து சொல்லும்!!

விரிந்து கிடக்கும் இவ்வுலகம்
ஆச்சரியமான ஓவியச் சுரங்கம்
இவ்வரங்கக் காட்சிகளை
ரசிக்க முடியா இவன் கண்கள்
என்ன பாவம் செய்தனவோ!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (17-Nov-14, 6:28 am)
பார்வை : 84

மேலே