கனவுகள் மெய்ப்படவேண்டும்

கனவுகளுக்கு எல்லையில்லை
என நினைத்து
எனக்குப் பிடித்த மாதிரி
நான்கண்ட கனவுகள் சில

தென்றலாய் வீசித்திரிய வேண்டும்
சங்காய் ஊதித்திரிய வேண்டும்
குயிலாய் பாடித்திரிய வேண்டும்
மயிலாய் ஆடித்திரிய வேண்டும்
காகமாய் கூடித்திரிய வேண்டும்
நதியாய் ஓடித்திரிய வேண்டும்
நிலவாய் ஒளி வீச வேண்டும்
மலராய் மணம் வீச வேண்டும்
கடலாய் அலை வீச வேண்டும்
வண்டாகி பூவில் தேனெடுக்க வேண்டும்
கண்மையாகி பெண்மையுனர்த்த வேண்டும்
உடையாகி மாணம் காக்க வேண்டும்
மாறியாகி ஏறி நிரைக்க வேண்டும்
பாயாகி தாயை சுமக்க வேண்டும்
பேயாகி தீயோரை ஆட்டிப் படைக்க வேண்டும்
சூரியணாய் சுட்டெரிக்க வேண்டும்
பருந்தாய் உயரப்பறக்க வேண்டும்
விருந்தாய் வயிற்றை நிரைக்க வேண்டும்
மருந்தாய் நோய் தீர்க்க வேண்டும்
தோழிக்கு ஓர் தாய் மடியாக வேண்டும்
நண்பனின் கைக்குட்டையாக வேண்டும்
தங்கையின் கைப் பொம்மையாக வேண்டும்
அப்பாவின் மீசையாக வேண்டும்
ஏழையின் பசி தீர்க்க வேண்டும்
கோழையின் பயம் போக்க வேண்டும்
புல்லாங்குளல் ஓசையாக வேண்டும்
புருவங்களுக்கு மத்தியில் புதைந்துபோக வேண்டும்
நடைபழகும் குழந்தையின் நடைவண்டியாக வேண்டும்
புல்லின் நுணியில் படுத்துறங்கும்
பணித்துளியாக வேண்டும்
நாய்களைப் பிடித்த நண்பனின்
மடியில் நாய்க் குட்டியாக வேண்டும்
சுயநலமில்லாமல் வேண்டும்
ஒவ்வொருவருக்கும்
வரம் கொடுக்கும் சாமியாக வேண்டும்
முள்ளாகி பாதங்களின் மென்மை தீண்ட வேண்டும்
நட்சத்திரங்களில் நற் சத்திரம் கட்ட வேண்டும்
கடிகாரமாகி நேரம் காட்ட வேண்டும்
பசுவாகி பால் தர வேண்டும்
குருவியாகி கூடுகட்ட வேண்டும்
கற்றாகி சுவாசம் தர வேண்டும்
மரமாகி நிழல் தர வேண்டும்
பாடுபட்டு சோரு திங்க வேண்டும்
ஒரு பெண்ணின்
மனம் திருட வேண்டும்
பேசாமல் பேச வேண்டும்
கண்களால் கைது செய்ய வே/ண்டும்
அன்புக்கு அடிமையாக வேண்டும்
இப்படி இவற்றுள்
இன்னும் பல சேர்க்க வேண்டும்

நான் கண்ட
எனது கனவுகள்
மெய்ப்பட வேண்டும்


-கார்த்திக்.சி
4 ம் ஆண்டு இயந்திரப் பொறியியல்
பி.எ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
பொள்ளாச்சி.

எழுதியவர் : karthik mani (17-Nov-14, 7:02 am)
பார்வை : 80

மேலே