இன்று நல்ல நாள்

வாழ்வில் ஒருநாள் போனதை
உனக்குச் சொல்லி
மறைகிறது
மாலைச் சூரியன்..

உறுதியான நம்பிக்கையை
உனக்குக் காட்டி
உதிக்கிறது
காலைக் கதிரவன்-
புதிய நாளாய்..

நடத்து இந்த நாளை
நம்பிக்கை
நல்லதாய்க் கொண்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Nov-14, 6:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : indru nalla naal
பார்வை : 308

மேலே