கலாச்சார கொலையாளிகள்
அன்பை பரிமார
உடல் தழுவலையும்
உதடு தழுவலையும்
பாலமாய்
நினைத்த
நவீன தலைமுறையே
அன்பின் அர்த்தத்தை
அசிங்கமாய் ஆக்கி விடாதீர்கள்
கட்டி அணைப்பதற்கும்
உதடு பதிவதற்கும்
அன்பு என்பது
எல்லா வயதிலும்
எடுபடாது
பருவத்தில்
கட்டி அணைப்பது
அன்பு என்று
பொருள் படாது
நாளை
உங்களின் மனைவியிடமோ
கணவனிடமோ
நான் இத்தனை
பேரோடு
கட்டி அணைத்தும்
உதடு பதித்தும்
அன்பை பரிமாரினேன் என்று
உங்கள் வாழ்க்கை துணையிடம்
கூறி பாருங்கள்
அல்லது
உங்கள் வாழ்க்கை துணை சொல்ல
கேட்டுபாருங்கள்
அப்பொழுது புரியும்
கலாசார
வார்த்தையின்
உண்மையான
அர்த்தம்
ஏற்கனவே
உடையிலும்
பழக்கத்திலும்
நசுங்கி
உயிருக்கு போராடும்
என்
கலாசாரத்தை
உங்களின்
ஆர்வ கோலாரிலும்
பருவ கோலாரிலும்
போட்டு
புதைத்து விடாதீர்கள்
கலாகாரத்தை
வளர்க்க
வக்கில்லாத
நீங்கள்
அழிப்பதை
எந்த
தமிழனும்
தாங்கி கொள்ள
மாட்டான்
உங்களக்கான
இடத்தில்
உங்கள்
கலாசாரத்தை
வளர்த்து
கொள்ளுங்கள்