வேண்டாம் நாகரீக மோகம் -கயல்விழி

நான்கு சுவற்றுக்குள்
கொண்டவன் மட்டுமே
கண்டிடும் அங்கங்களை
நடுத்தெருவில்
நாகரீகம் என்னும் பெயரில்
கண்டவனுக்கு காட்டுதல்
மங்கை எமக்கு முறையோ .?
இதழோடு இதழ் பருகும்
இன்ப முத்தம் தனை
மஞ்சத்தில் உன்
மணவாளனிடம் பெற்று
கற்பரசி ஆவதை விடுத்து
கடைதெருவில் கண்டவனிடம்
பெற்று
தாசி எனும் பட்டம் பெறுதல்
சரியோ .?
காலங்கள் மாறினாலும்
காளை என்றும் காளை தான்
கயவர் கடைக்கண் பட்டாலும்
கற்பில் அது களங்கம் தான்
வேண்டாம் பெண்ணே
நாகரீக மோகம்
அதனால் கிடைக்கும்
பெரியோரின் சாபம்
இலைகள் கருகிட
மானம் இழந்ததாய்
பட்டுப்போகும் செடிகொடிகளை
பார்த்து கற்றுக்கொள்
நாணமும் மானமும்
பெண்மைக்கு அழகென்று .