பெண்மை -சகி

பெண்ணே...
எத்தனை துன்பங்கள்
எத்தனை இன்னல்கள்
எத்தனை அவச்சொற்கள்
இன்றுவரை நீ கடந்த
பாதை இதுவே ...
உண்மை அன்பை
உணர்ந்தாயா உன் வாழ்வில்?
இல்லை உன் அன்பை
உணர்ந்தவர் தான் உண்டா?
பிறப்பும் உனக்கு சொந்தமில்லை ...
இறப்பும் உனக்கு சொந்தமில்லை ...
உன் வாழ்வும் உனக்காக இல்லை ...
உன் இறப்பும் உனக்காக இல்லை ...
உன் வாழ்வின் அர்த்தம்
என்னவென்று உணர்வாயா ?
ஆனால்...
பிறர் வாழ்வின்
அர்த்தம் மட்டும் நீ....
பிறர் அறியாத அன்பு நீ..
பிறரின் அன்பை உணர்ந்த
அன்பின் இலக்கணம் நீ ...
கேள்விக்குறி தான்
உன் வாழ்க்கை ...
பிறர் வாழ்வின் முற்றுப்புள்ளி
தான் உன் வாழ்க்கை ...
உனக்கான வாழ்க்கை
மட்டும் நீ வாழமுடியாது....
அடுத்தவர்க்கான வாழ்க்கை
மட்டும் நீ....
பெண்ணவள் புரியாத புதிராம் ...
புரிந்துக்கொண்டால் அவள்
என்றுமே புதியவள் தான்...
என்று உணருமோ?
சமுதாயம் பெண்ணவளை ...
உறவுகள் புரிந்துக்கொண்டால்
போதுமே...
புரியாத உறவுகள் தானே
அதிகம் பெண்ணவளை ...
போராட்டமான வாழ்க்கை ..
போராடியே தீர வேண்டும்...
வாழ்க்கை முழுவதுமே...
புண்படுத்த மட்டுமே
கற்றுக்கொண்ட உறவுகளே அதிகம்....
புரிந்துக்கொள்ள முயற்சி
செய்யுங்கள் பெண்ணின்
மனநிலைமையை....
அனைவரின் வாழ்வும்
மகிழ்ச்சி தான்...
உணர்ந்து பாருங்கள்
புரியும் வாழ்வின் அர்த்தம் ....