குட்டி தமிழச்சி

கொஞ்சிடும் குழந்தை
இவள் அழகை
மிஞ்சிடுமோ தேவதைகள் .

வளையல் கொஞ்சும்
மென்கரங்கள்
கொலுசுகள் சிணுங்கும்
சின்னக்கால்கள்

தலை நிறைந்த மல்லிகை
தரைப்பார்த்து இவள்
நடக்கையில் தடுமாறித்தான்
போனான் பிரம்மனும்

செதுக்காத சிற்பமா?
வரையாத ஓவியமா?
வானமும் காணாத
வானவில்லா ?

பூக்கள் காணாத
நறுமணமா?
தென்றல் காணாத
மெல்லிசையா ?

இல்லை இல்லை இவள்
அவைகளை மிஞ்சும்
செந் தமிழச்சி ....

எழுதியவர் : கயல்விழி (27-Nov-14, 10:24 am)
பார்வை : 232

மேலே