தோற்றோர்களின் தோழன்
சாதியின் பேரைச் சொல்லி!
வீதியில் வீசப்பட்ட!
நாதியற்ற காதல்களுக்கு
நான் தருவேன் அடைகலத்தை!
பேதையின் கண்கள் தந்த
போதையில் வீழ்ந்தோற்கெல்லாம்
பாதையில் மாற்றம் காட்டி
பற்பல நன்மை செய்வேன்!
கண்ணென வளர்த்தோர் முன்னர்
பெண்ணென பிதற்றல் கொண்டு
உன்னை நீ மறந்த பின்னும்
உண்மையை அறிய செய்வேன்!
பொய்யென சொல்லவில்லை!
பெண்களின் காதல்தனை!
பொய்யாக சிலர் உள்ளதனால்
பொக்கிக்ஷமும் படுகுழியில்..