சூரியனை சுட்டெரிக்கும் உன் விழிகள் 555

என்னவளே...

உன் விழிகள் வீச்சில்
சூரியன் கூட யோசிக்கும்...

உன்னை தொட
வெயிலாக...

புன்னகை பூக்கும்
உன் இதழ்களில்...

பிரியாமலே மெல்லியதாய்
தேன் எடுக்க ஆசையடி...

உன் இதழ் பூக்களில்...

பூமகளே இடையே இல்லாமல்
இருக்கும் உன் இடையை...

கிள்ளிபார்க்க ஆசையடி...

சூரியனை சுட்டெரிக்கும்
உன் விழிகளில்...

என் இதழ்
பதிக்க ஆசையடி...

உன் விழியோரம் மச்சம்
பார்க்கும் போதெல்லாம்...

உன் அழகிற்கு பிரம்மன்
வைத்த திருஷ்டி பொட்டோ...

அழகின் மொத்த
உருவமே...

வைக்க வேண்டுமடி
மீண்டும் திருஷ்டி பொட்டு...

உனக்கு என் கையால்...

அதுவே நான் உனக்கு வைக்கும்
திருமண பந்தமாகவே...

முத்தம் ஒன்று
வேண்டுமடி...

இன்று காதலியாக
என் கன்னத்தில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Nov-14, 4:08 pm)
பார்வை : 853

மேலே