ஏமாற்றம் - சித்ரா

உயிர் போகும் வலியிலும்
-- நீ உண்மை பேசவில்லை
உன்னோடு உறவு கொள்ளஇனி,
--எனக்கு எப்போதும் ஆசையில்லை
 
மறுத்த போதும் என்
--மனம் உன்னை வெறுக்கவில்லை
உண்மை மறைத்த போது,
--உன்பிரிவு என்னை நொறுக்கவில்லை
 
நடிக்கும் போது என்
--நம்பிக்கை உன்னை உறுத்தவில்லை
நேர்மையோடு நான் இருந்தேன்,
--நீ விலகுவதில் எனக்கு வருத்தமில்லை
 
உன் கொடும் கோவம்
--கூட என்னைக் கொன்றதில்லை
உன்போலி அன்பு ஒரு
--நாளுமே என்னை வென்றதில்லை
 
போ என்று சொன்ன
--போதும் ஏனோ வலிக்கவில்லை
உன்பொய் வந்து கொல்லும்
--இந்த நிமிடம் பிடிக்கவில்லை..

எழுதியவர் : சித்ரா (1-Dec-14, 3:29 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : yematram
பார்வை : 906

மேலே