அறிவியல் மனிதன்

உலகின்
உயிரினங்களிலேயே
உயர்வானதும்
உன்னதமானதும் ...
அதிசயமானதும்
அற்புதமானதும் ...
வியப்புக்குரியதும்
விநோதமும் ...
வீரியமுமான
உயிரினம் எதுவெனில் ,
அது
மனித இனம்என்றால்
மறுப்பார் உண்டோ ...?

விலங்குகளோடு
விலங்குகளாய்..
மொழியறியாமல்
ஊமைகளாய் ..
உடையறியாமல்
நிர்வாணிகளாய் ..
காடுகளில்
காட்டுமிராண்டிகளாய்
சுற்றித்திரிந்த மனிதனுக்கு
காலக்கிழவி
தீட்சையளித்தாள்...!

வானசூரியனை மூடிய
வண்ணமேகங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
விலகுதல்போல
ஞான சூரியனை மூடிய
அஞ்ஞான மேகங்கள்விலகிற்று ;
அறிவுக்கண் துலங்கிற்று .

மனிதனின்
ஆறாம் அறிவு விழித்தது ;
அறிவியல் ஜோதி முகிழ்த்தது.

இன்றைய மனிதன்
திங்களில் உலாவுகிறான்
செவ்வாயைத் துழாவுகிறான்
வெள்ளிகளில் எல்லாம்
விலாசம் பொறிக்கிறான்
ஆஹா ..!
என்னே மனிதசக்தி ..?

நொடிக்குநொடி
கணத்துக்குக் கணம்
பொழுதுக்குப் பொழுது
நாளுக்கு நாள்
விஞ்ஞான கண்டுபிடிப்புகளில்
வித்தைகள் புரிந்து
ஆண்டவனையே
அதிசயிக்கவைக்கிறான்
அறிவியல் மனிதன் .

பூமியில்
விந்தையூட்டும்
விசித்திரப்பிறவி
மனிதன் ..!



********* ********* ********* ********

எழுதியவர் : அண்ணாதாசன் (1-Dec-14, 10:23 pm)
பார்வை : 1547

மேலே