ஒரு முறை பிறந்து இரு முறை சாகிறேன்

இமைகள் மூடுதே
கண்களும்
கவிதைகள் சொல்லுதே
உன்னோடு பேச,பழக வேண்டுமென
தினம் ஒரு மணி நேரம்
இதயம்
விடுமுறை கேட்குதே.
உன் அணுகுண்டு பார்வையில்
என் இதயத்தை சிதறடித்தாய்
காதல் போர் மூட்டி
எனக்குள்ளே மூன்றாம் உலகப் போர்
துவக்கி வைத்தாய்
உன் தேகக் கடலினில்
என்னை
கப்பலாய் மூழ்கடித்தாய்
உனக்குள்ளே என்னை விழுத்தி
என்னை
உயிரோடு புதைத்து விட்டாய்
சொர்கத்தின் வாசலில்
நிற்பதாய் உணர்கிறேன்
என் முன்னே நீ வந்து
நிற்கையில்
நரகத்தின் வேதனையை
அடிக்கடி அனுபவிக்கிறேன்
கிட்ட வந்தும் நீ
பேசாமல் போகையில்
காகம் கூட என்னை
கண்டு கொள்ளவில்லையே !
நீ என்னைக் கடந்து போகையில்
பெண்ணே !
என்னடி செய்தாய்
உந்தன் பேரழகில்
உலகத்தை உன் வசப் படுத்திக்கொண்டாயோ !
என்னையறியாமல்
ஏதேதோ செய்கிறேன்
ஏனோ தெரியவில்லை
சில நாளாய்
எனக்குள்ளே சிறு சிறு
மாற்றங்கள்
சிதறிய பஞ்சுகளாய்
என் மனம் சிதறி
ஆங்காங்கே பறக்கிறது
சிலையை செதுக்கும் சிற்பியாய்
என் மனதில் உள்ளதை
கவிதையாய் செதிக்கி விட்டேன்
பெண்ணே
என்னை ஏற்றுக்கொள்ளு நீ
இல்லையென்றால் என்னை
தூக்கில் மாட்டிச் செல்லு நீ
உன்னாலே தினம் ஒரு முறை
பிறந்து நான் இருமுறை சாகிறேன்.
காதலோடு
ஏனோக் நெஹும்