நீ ஏற்கும் வரை

உன் கரம் பற்றுவதற்கு
ஒரு தரம் மண்டி இடுகிறேன்
உன்னிடம் அல்ல

உன்னிடம் இருக்கும் என் காதலிடமும்
என் கண்கள் சரணடைந்த உன் கண்களிடம்

அன்பே ஒரு முறை ஏற்று விடு
நான் பல முறை தோற்றாலும்
உன்னையே மாற்றும் -எனது
காதல்

பார்த்து பார்த்து -என்
பார்வைகளுடன் பழகிவிட்டு
இன்று
பார்வைகளை பாவமாக்கிவிடுகிறாயே

உன்னை என்று
என்னுள் அமர்த்தினேனோ
அன்றில் இருந்து
நீ செய்யும் தவறுகளையும்
மன்னிக்கவில்லை மறந்து செல்கிறேன்

நீயும் எனை மன்னிக்க வேண்டாம்
மறந்து சென்றிடாதே

பூவை ஓர் போர்க்களத்தில்
வைத்து தாக்குவதைப் போல
அன்பே -இன்று
எனை ஏற்க்க மறுத்து
அணு அணுவாய் கொன்று
வாழுகின்றாய தெரியவில்லை

வீதியிலே பாதியில் விடாதே
உனக்காக உயிர் விட
என்னுயிர் காத்துக் கிடக்கிறது
உன் உண்மையான அன்பிற்கு மட்டுமே

நீ சென்ற பின்பும்
உனைத் தொடர்ந்து வருகின்ற நிழல்
இன்று தனலாக மாறிவிட்டது

இப்பொழுதும் எனை
நீ ஏற்கவில்லை என்றால்

இறுதிவரை நீ எனை ஏற்கும் வரை
காத்திருக்கிறேன் -

எழுதியவர் : keerthana (2-Dec-14, 10:26 pm)
Tanglish : nee erkum varai
பார்வை : 3691

மேலே