குளிர்காலம்

பனிக் குளிர் இதமாக
நம் மேனியில் படும்போது
குளிர் பிரதேசத்தில்
இருக்கும் உணர்வு நம்மிடையே

இந்தக் குளிர் நீடிக்காதா என்று
ஏங்கும் அளவிற்கு வெயில் நம் நாட்டில்
வெப்பத்தைத் தாங்க முடியாது
புழுவாய் துடிக்கின்றோம்
புழுக்கம் நம்மை வாட்டுகிறது

இன்றைய சூழல் இதமாக மிதமாக உள்ளது
தற்போது நிலவும் பனிக்காலம் நிரந்தரம் அற்றது
இருந்தும் பாதிப்பு மிகக் குறைந்த காலம்
இந்த அழகிய பனிக்காலம்
இந்த குளிரில் நடப்பவை எல்லாம்
சந்தோசமும் அமைதியும் கொண்டாட்டமும்தான்

கிறிஸ்து பிறந்த கிறிஸ்மஸ் பண்டிகையும்
இந்தப் பனிக்குளிரில் தான்
இந்தக் காலம் மிக மிக அரிய நற்காலம்
பனிக் காலம் தொடங்கி விட்டால்
மக்கள் மனங்களில் படு சந்தோசம்தான்
மார்கழிப் பனியில் மகிழ்வுடன் மனங்கள்

கோலங்கள் முற்றங்களை வண்ணங்களால்
நிரப்பி வரவேற்கும் வாசல்கள் சிறந்திருக்கும்
அழகிய பெண்களின் அற்புதக் கைவண்ணங்கள்
இக்கோலங்கள் ஆக மிளிர்ந்திடும்
பனிக்காலம் இது பொன்னான காலம்

இக்காலம் ஆடல் பாடல் கொண்டாட்டம்
நிறைந்து வழியும் செழிப்பான காலம்
சந்தோசம் மட்டுமே ததும்பி நிற்கும்
சஞ்சலம் அற்ற சமத்துவம் நிரம்பி
எல்லோர் மனமும் அக்களிப்புடன்
ஆனந்தமே பொங்கிடும் காலம் இக்குளிர் காலம்

குளிர்வரும் காலம் மனங்களில்
சந்தோசம் துளிர் விடும் காலம்
ஊரெல்லாம் நாடெல்லாம் வீடெல்லாம்
ஏன் உலகெல்லாம் கொண்டாட்டம்
பாவங்கள் குறைந்து புண்ணியங்கள்
நிறையும் காலம் இக்குளிர் காலம் மட்டுமே

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Dec-14, 1:12 pm)
பார்வை : 719

மேலே