மழைத்துளி

இடியின் இசை கேட்டு --என்
இதழின் இசை நின்று போனது

மின்னலும் --அங்கு
மிரட்டல் விடுக்க

துள்ளத் துடிக்கும் விண்மீன்களை
துணிச்சலாக மேகம் மறைத்து நிற்க

அனைத்தையும் சமாளித்து
அழகாய் விழுந்தது

ஓர் மழைத்துளி --என்
ஒற்றை விழியின்
ஓரத்தில் .....!

எழுதியவர் : ஜேம்ஸ் (3-Dec-14, 4:41 pm)
சேர்த்தது : டார்வின் ஜேம்ஸ்
Tanglish : mazhaithuli
பார்வை : 229

மேலே