மனிதம் புதைந்த நாள்

...""" மனிதம் புதைந்த நாள் ""...

தீ பிளம்புக்கு நடுவே
போர்க்களம் பசியினை
புசித்த பட்டினிக்காலம்
குழந்தைகள் பெண்களென
இரக்கமின்றி கொலைகள்
போர்கால உலகத்தின்
நியதிகள் வேறோடே
அறுத்தெறிந்த நாள் ,,,

அமைதிப்படைகளை
இங்கு அனுப்பியவரும்
அமைதியாகவே பொறுமை
காக்க வாய்திரந்தும்
அழமுடியாத நிலை,,,

இது இலங்கையின்
போராட்டமல்ல எங்கள்
இலக்கை குறிவைத்தே
ஒரு இனத்தையே
அழித்த கொடூரம்,,,,,

வேடிக்கைதான் பார்த்தது
உலகம் எங்கள் வேதனை
ஓலத்தை மழலைக்கும்
மாரூட்டகூடாதென
மங்கையரின் மாரருத்தன
மனிதமிருகம், மரணத்திற்கு
முன்பே மண்ணறை
குழிகளுக்குள் நாங்கள்
புதையுண்டு பிணங்களாய்
இரவும் விடியலும்
விளங்கயிலா சோகத்திலே
மண் சிவந்த கறுத்த நாள்,,

வேதனையின் விளிம்பில்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (5-Dec-14, 1:47 pm)
பார்வை : 474

மேலே