ஒரு காதலி வருகைக்கு - வேலு

நிலா நிழல் விழுந்த
கிணற்றில் நீராடல் அவள் - கிணற்றை
காவல் காக்கும் மனசு
ஒரு காதலி வருகைக்கு

பொத்தி பொத்தி மறைத்திருந்த காதல் எல்லாம்
மை தொட்ட தொட்ட எழுதி கொண்டிருக்கு
ஒரு காதலி வருகைக்கு

நிலம் பார்த்து வளர்ந்தவன்
நிலவை தொட நினைத்து கொண்டு திரிகிறேன்
ஒரு காதலி வருகைக்கு

"காமத்துப்பால் " விளக்கம் கேக்கும் மனசு
வானவில்லை வளைத்து வளையல் செய்யும் வீரம்
ஒரு காதலி வருகைக்கு

வழக்கத்தைவிட அதிகம் கவிதை வாந்தி
வருடி செல்லும் உன் வாசம்

வாழ்ந்துகொண்டுதான் இருப்பேன்
கனவு உலகில் அரசனாகவே !!!
காதலியே உன் வருகை வரை !!!

எழுதியவர் : வேலு (5-Dec-14, 12:30 pm)
பார்வை : 320

மேலே