நீலக்குயில் தேசம்9---ப்ரியா
(முன்பகுதி சுருக்கம்:தன் மாமனாரின் திடீர் அழைப்பால் அவரைக்காண சென்றாள் கயலின் தாய் சுசீலா...இன்னொருபுறம் திவ்யா சொன்ன தகவலை கேட்டதும் கயல் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே வந்துவிட்டாள்.....)
இனி..........
ராஜலெட்சுமி வீட்டை விட்டு சென்ற பிறகு இதுவரைக்கும் மாமா மற்றும் மாமியார் சுசீலாவிடம் பேச்சில்லை இவள் வீட்டிற்கு அவர்கள் வருவதும் இல்லை இவளை அங்கு அனுமதிப்பதுமில்லை ஏதாவது விசேஷங்களில் காண நேரிட்டாலும் இவள் முகத்தை கண்டுகொள்வதுமில்லை ஆனால் கயலின் அப்பா இறந்த பிறகு கொஞ்சம் பேச ஆரம்பித்தனர் கயலிடம் மட்டும் பேசி அனுசரித்து வந்தனர்.....ஆனால் இப்போது அவர் திடீரென அழைத்ததற்கு என்னக்காரணம் என்று மனதிற்குள் யோசித்தவாறு அவர்கள் வீட்டை அடைந்தாள் கயலின் தாய் சுசீலா.
இத்தனை வருடங்கள் கழித்து தன் கணவன் வாழ்ந்த வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கிறோம் என்று பெருமையாக சந்தோஷத்தில் கண்ணீருடன் உள்ளே சென்றாள்.இவளை பார்த்ததும் மாமியார் கண்ணீருடன் ஓடி வந்து அணைத்துக்கொண்டார்......அவர்கள் இருவரது கண்ணீரிலியே எவ்வளவு அன்பும் பிரிந்திருந்த ஏக்கமும் இருக்கிறது என்பதை நன்றாய் புரிந்துகொண்டாள் சுசீலா.......அழாதீங்க அத்தை மாமா என்று இருவரையும் தேற்றினாள் ஆனால் விம்மலுடன் இவளுக்கு வந்த அந்த கண்ணீரை இவளாலும் அடக்க முடியவில்லை.
எப்படியோ அவர்களையும் தன்னையும் தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தனர்....முதல் வார்த்தையாக மாமனார் அம்மாடி என்னை மன்னித்துவிடுமா நான்தான் தேவையில்லாமல் அந்த பாவி செய்த தவறை மனதில் வைத்துக்கொண்டு உன்னையும் என் மகனையும் பேத்தியையும் ஒதுக்கி வைத்துவிட்டேன் இப்பொழுது எனக்குன்னு யாரும் இல்லை மகனும் போயிட்டான் இருகிறது நீங்க மட்டும்தான் என்று கண்ணீர் மல்க கூறினார்.
அவரது பேச்சுக்கு மதிப்பளித்து அவள் பதில் பேசாமல் அப்படியே நின்றாள்.
மேலும் பேச ஆரம்பித்தவர் ராஜலெட்சுமியையும் அவள் செய்த துரோகத்தையும் சொல்லி இனிமேல் அவள் உறவு நமக்கு வேண்டாம் அம்மா என்று இவள் கைகளை பற்றிக்கெஞ்சினார்........என்ன மாமா இப்படி சொல்றீங்க நா...........ன்.....உங்க விருப்பப்படிதான் நடந்து கொள்வேன் எனக்கு கணவரே போனப்புறம் உங்கள விட்டா யாரு மாமா இருக்கா...? நீங்க என்ன சொல்றீங்களோ கேட்கிறேன் இனி உங்க காலடியில்தான் நானும் என் பொண்ணும் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினாள் சுசீலா......?
அவளை தேற்றிய அவர் கயல் ராஜலெட்சுமி பற்றி விசாரித்ததை சொன்னார்.......ஏன்?அவ திடீர்ன்னு இப்டி கேக்குற அவளுக்குதான் எதுவும் தெரியாதே சின்ன பொண்ணா இருந்தும் இப்டி திடீர்னு கேட்குறான்னா ஏதோ பேச்சு நடந்திருக்கு யாரோ அவக்கிட்ட ராஜலெட்சுமிப்பற்றி தூண்டி விட்டிருக்காங்க......என்று சொல்லி சுசீலாவை சந்தேகமாய்ப்பார்த்தார்.......?
உடனே அவள் நடந்த எல்லா விபரத்தையும் ஒன்றுவிடாமல் அவரிடம் சொன்னாள்.....அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவர் சரி இதப்பற்றி இனி அவக்கிட்ட எதுவும் பேச வேண்டாம் அவ சின்னப்பொண்ணு அவளுக்கு எதுவுமே தெரியாது நாமதான் அவளை நல்லா பார்த்துக்கணும் இந்த வயசு அப்டி............. அது என்ன இது என்ன எப்டி தெரிஞ்சிக்கலாம் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்க வைக்கும் வயசுபருவம் அதுமட்டுமல்ல நாம் செய்றதுதான் சரி என்று அவளுக்கு தோன்றும் நாம்தான் அவளை ஒருநிலைப்படுத்தனும்.....இனிமேல் நீயும் அவக்கிட்ட ராஜலெட்சுமி பற்றி பேசவேணாம் அவளும் பேசமாட்டா என்று கம்பீரமான குரலில் சொன்னவர்..உடனே உன் வீட்டிலிருக்கும் பொருட்கள் அனைத்தையும் இங்கு மாற்றிவிடுவோம் உன் அம்மாவையும் இங்கே அழைத்து வந்துவிடுமா இங்கேயே நீங்கள் தங்கலாம் என்று சந்தோஷமாய் சொன்னவர் கயலையும் நான் பார்த்துக்கிறேன் அவள் எந்த தவறான முடிவும் எடுக்காமாட்டாள் நான் இருக்கேன் ஏன்னா அவள் என் செல்லம் என்று கயலைப்பற்றி சொல்லி உள்ளம் நெகிழ்ந்தார்........!
கவனவா??ஏன் இப்படி ஒரு கனவு கயலுக்கு வருகிறது தினமும் வருதாமே அப்போ இதுல ஏதோ இருக்குது என்னப்பண்ணலாம் அந்த கொல்லிமலை பக்கத்திலிருக்கும் ஆனையடி சாமியார்க்கிட்ட அழைத்துவிட்டு போகலாமா????என்ற ஆழ்ந்த யோசனையில் இருந்தார் கயலின் தாத்தா......
மாமா வீட்டிற்கு வந்து சேரவேண்டி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் கயலின் தாய்??????
______________________________________________________________________________________________________________
அங்கு கல்லூரியில் திவ்யாவை சந்தித்த கயல் முதலில் அரவிந்த் பற்றிக்கேட்டாள்......அதற்கு திவ்யா அரவிந்தும் நானும் காதலிக்கிறோம் உன்னைப்பற்றி அனைத்து விஷயங்களும் என்கிட்ட சொல்லிருக்கான் உன் அத்தை விஷயம் எனக்கும் ராகேஷ்க்கும் நன்றாகவேத்தெரியும் அரவிந்தின் தோழன்தான் ராகேஷின் அண்ணன்......ராகேஷ் எனக்கு நெருங்கிய நண்பன் அதனால் நாங்கள் எல்லா விஷயத்தையும் பகிந்து கொள்வோம் நாங்க ரெண்டுபேரும் வேற வேற பள்ளிகளில்தான் படித்தோம் ஆனால் டியூசனுக்கு செல்லும் போதும் விடுமுறைனாட்களிலும் எங்கள் நட்புறவை மேம்படுத்திக்கொண்டோம்.......அப்படியிருக்கும்போது ஒருநாள் ஊட்டியிலிருந்து வந்த ஒருக்குடும்பம் இவர்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவும் அந்த வீட்டிலிருக்கும் பசங்களால் எனக்கு நன்றாக நேரம் போகும் சேர்ந்து விளையாடுவோம் என்றும் என்னிடம் பெருமையடித்தான் ராகேஷ்.
அந்த வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் நல்ல சுட்டியானப்பெண் அவளுடன் இருந்தால் நேரம் போறதே தெரியாது உன்னைவிட ரொம்ப தைரியசாலி அறிவாளி அழகானவள் ரசனையானவள் என்று என்னிடம் எப்பொழுதும் சொல்லி வெறுப்பேற்றுவான் ராகேஷ்........
அதேபோல் என் அரவிந்தும் என்னிடம் வந்து கயல்விழின்னு எனக்கு ஒரு அத்தைப்பொண்ணு இருக்கா அவ உன்னவிட மிக அழகா இருப்பா அவளது கண்ணைப்பார்த்தாலே ரசிச்சுக்கிட்டே இருக்கலாம் அவ்ளோ அழகுன்னு பேசும்போதெல்லாம் உன்னைப்பற்றிதான் பேசுவான்.
என்னிடம் ரெண்டுபேரும் இப்படி சொல்லி சொல்லியே வெறுப்பேற்றினர்............அந்த வெறுப்பே உன்னையும் அந்த பொண்ணையும் பார்க்கணும்னு ஓரூ ஆசையைத்தூண்டியது........ஒருநாள் அரவிந்த் இப்டி சொல்லும்போது எனக்கு கோவம் வரவே அந்த இருப்பெண்களையும் உடனே பார்க்கவேண்டுமென அடம்பிடித்தேன்.
எல்லாப்பெண்களும் தன் காதலனும் நெருங்கிய நண்பனும் ஒருப்பெண்ணையே புகழும்போது அவள் எப்டின்னு பார்க்கணும்னு ஆசைப்படுவாங்கதானே.............நானும் ஆசையில் இருந்தேன்.
ஒருநாள்......... சரி நான் காமிச்சித்தாரேன்னு சொல்லி முதல்நாள் ராகேஷ் அந்த பொண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான் உண்மையிலேயே அவன் சொன்னதை விடவும் அந்தபொண்ணு மிகவும் அழகாய்த்தெரிந்தாள் நானும் சகத்தோளியிடம் பேசுவதுபோல் பேசினேன் நன்றாய் பேசினாள் எனக்கு அவளை ரொம்பப்பிடித்துப்போனது அழகியிடம் பேசிவிட்டு ராகேஷிடம் வந்து உண்மைதான்டா நீ சொன்ன மாதிரி அவள் புத்திசாலி மற்றும் பேரழகிதான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன் அவள் பெயர் பிரியதர்ஷினி.
ராகேஷ் சொன்னப்பொண்ணை பார்த்துவிட்டு அரவிந்திடம் வந்து உன் கயல்விழியிடம் என்னை அழைத்து செல் என்றேன் ஆனால் அவன் உன்னிடம் இதுவரைக்கும் அழைத்து வரவில்லை நாளைக்கு நாளைக்கு என்று ஏமாற்றிவிட்டிருந்தானேத்தவிர உன்னை எனக்கு காட்டவில்லை.........!
அதன் பிறகு இங்கு கல்லூரிக்கு வந்த பிறகுதான் ராகேஷ் சொல்லி நான் உன்னைப்பார்த்தேன் உன்னைப்பார்த்ததும் நான் அப்படியே ஒருமுறைஇறந்து பிறந்தேன் தெரியுமா???என்று திவ்யா சொல்ல ஏன் என்பதுபோல் புருவம் உயர்த்திப்பார்த்தாள் கயல்....?
ராகேஷ் சொன்ன பொண்ணும் நீயும் அச்சுல வார்த்ததுப்போல ஒரே மாதிரி இருந்தீங்க என்னால நம்பவே முடில.....என்ன இவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்து எமாத்துறாங்கன்னுதான் நேற்றுவரை நினைச்சிட்டிருந்தேன் அதன்பிறகு நேற்று மாலையில் அரவிந்த் வந்து என்னிடம் எல்லா விஷயங்களையும் சொன்னான் உன் அத்தை பற்றி அனைத்தையும் தெரிந்துகொண்டேன்.
கண்டிப்பா அந்தப்பொண்ணும் கயல்விழிக்கும் ஏதோ தொடர்பு இருக்குதுன்னு நான்தான் அரவிந்திடம் சொன்னேன் அவனும் அது உன் அத்தை பொண்ணாகத்தான் இருக்கும்னு அரவிந்த் நம்புகிறான் அதான் உன்னிடம் எதுவும் சொல்லவதற்குமுன் அவர்களைப்பற்றித்தெரிந்து கொள்ள சென்றிருக்கிறான் என்று திவ்யா அனைத்தையும் சொல்லி முடித்தாள்.........!
இப்பொழுது இது அனைத்தையும் கேட்ட கயல் அப்படியே ஆடிப்போய்விட்டாள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனாள் அப்படியே திவ்யாவைக்கட்டிக்கொண்டாள்.
ராகேஷ் பார்வையின் அர்த்தம் இவளுக்கு இப்பொழுது நன்றாகவே புரிந்தது.......தன் அத்தையும் விரைவில் கிடைக்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் அவள் சந்தோஷமாய் கிளம்பும் சமயம்......"கயல் ஐ லவ் யூ நான் உன்னை உண்மையிலேயே மனதார காதலிக்கிறேன்" என்ற குரல் கேட்க திரும்பினாள் கயல்விழியாள்..............!
தொடரும்..........!