புதைந்த கனா
நேற்றய என்
மஞ்சத்து
சயனத்தின்
இறுதிக்கனவு
உனக்கானது
பெண்ணே!!
என்
குரோமோசோமின்
ஆழ்படுக்கையில்
நீ உறக்கம்
கொள்கிறாய்!!
இதயசிறகுகள்
பிடுங்கிவந்து
என் ஜீன்களெல்லாம்!!
விசிறிகிறது
உன் தேகத்துக்கு
நீ திரும்பி
படுக்கையில்
உன் கொலுசுகள்
இசைக்கு
சுருதிசேர்க்கிறது
என் இரத்த ஒட்டம்!
உள்ளங்கை
ரேகை உரித்து
உனக்காக
யாழ் இழை
முறுக்கிகிறேன்!!
விடிந்து
விடுகிறது!!
கனவு புதைந்ததில்
உன் கண்கள்
கத்தரித்திருந்தன
என் விரல்களை..