என்னத்த சொல்ல - யாழ்மொழி

.........காத்திருப்பு...........
கடுகடுப்பு

.........காதல்...........
நிராகரிப்பு

.........நேசம்...........
நடிப்பு

.........கவிதைகள்...........
எழுதி நிரப்பிய காகிதம்

.........கனவு...........
கசப்பு

.........எதிர்காலம்...........
எதுவும் மாறும்

.........உயிரே...........
உளறல்

.........பார்வைபோதும்...........
பார்த்தவரையில் போதும்

.........மாற்றமில்லை...........
அக்கறையில்லை

.........மறுபரிசீலனை...........
அவசியமில்லை

.........கடைசியாக ஒருமுறை...........
நேரவிரயம்

.........முடிவு...........
சொன்னது

.........காத்திருப்பு...........
மீண்டும் கடுகடுப்பு


அய்யோ அய்யோ - என்
அசட்டு நண்பனே
சளைக்காமல் நீ
சம்மதிக்காமல் நான்

இருந்தும் தொடர்கிறது நட்பு
இதற்கு பெயர்தான் என்ன..?

எழுதியவர் : யாழ்மொழி (8-Dec-14, 4:04 pm)
பார்வை : 198

மேலே