முட்டாள் பாரதி
முட்டாள் பாரதி........!
அன்று...!
உன்னை கவியாக பார்த்தவன்
கவிஞனாகினான் ..!
உன்னை வீரனாக பார்த்தவன்
மாணவனாகினான்...!
உன்னை சாமியாக பார்த்தவன்
பக்தனாகினான்...
உன்னை சின்னசுவாமியக பார்த்தவன்
பாரதியாகினான்...!
ஆனால் இன்றோ...!
நீ எழுதிய கவிதை
யாவும் வார்தையாகின..!
நீ கண்ட கனவு
யாவும் கற்பனையாகின..!
நீ பார்த்த பூனைகள்
யாவும் நிறம் மாறின...!
காரணம்...!
உனக்கு நடிக்க தெரியாது...!
இங்கு படித்த அறிவுமிகுந்த பலர்
இன்று உன் பிறந்த நாள் என்பதைவிட
நாளை ரஜினியின் பிறந்தநாள்
என்பதைபற்றியே யோசனை...!
நாட்டின் வரலாற்றில்
இடம்பிடித்த உனக்கு...!
நாட்டு மக்களின் வாழ்கையில்
இடம் பிடிக்க தெரியாத
நீ முட்டாள் பாரதி ...!
மடமையில் மயங்கிக்கிடக்கும்
மடயர்களிடம் மல்லுக்கட்டும்
நான் முட்டாள்...!
பா.பரத்...!