என் அம்மா

உனக்காக ஒரு கவிதை
எழுத ஆசை வைத்தேன்
அதற்காக தினம் தினம்
வார்த்தை தேடி அலைந்தேன்

கிடைப்பவை ஏதும்
புதிதாய் தோன்றவில்லை
இருப்பவை ஏதும்
உனக்கு நிகரில்லை

எழுதி எழுதி காகிதம்
வீண் ஆனதே
உன்னை பற்றி எழுதும்
எண்ணம் மேலோங்கியதே...

இரவெல்லாம் கண்விழித்து
இறுதில் எழுதி முடித்தேன்
"அம்மா" என்று

இதை விட வேற ஏதும்
எனக்கு தோன்றவில்லை.....

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (13-Dec-14, 8:45 am)
Tanglish : en amma
பார்வை : 236

மேலே