அனாதை இல்லம்

உன் வாழ்க்கை என்னும்
வாசலுக்கு முகவரி கொடுத்த
அம்மா என்னும் முதல்வரியை
அனாதை இல்லம் என்னும்
முகவரிக்கு சேர்த்ததன் காரணம்
உன் அக சுருக்கமா - உன்
தாயின் முக சுருக்கமா
பெற்றெடுத்த மகன் நீ இருக்கையில்
எப்படி செல்வாள் அனாதை இல்லத்திற்கு
உன்னை பாலூட்டி வளர்த்த
அன்னையை பாழாக்கி விடாதே
உனக்கு சோறு ஊட்டிய
அன்னைக்கு சோகத்தை ஊட்டாதே
தான் தூங்காமல் விழித்திருந்து
உன்னை தூங்க வைத்தால்
தூங்கிய நீ - இன்று
மொத்தமாகவே தூங்கி விட்டாயா?
உனது அகக்கண்ணை - திறந்துக்கொள்
உனது தாய் செல்ல வேண்டியது
அனாதை இல்லத்திற்கு அல்ல-உன்
அன்பெனும் இல்லத்திற்கு

எழுதியவர் : நரசிங்கமூர்த்தி (13-Dec-14, 11:37 am)
சேர்த்தது : நரசிங்கமூர்த்தி
Tanglish : anaadhai illam
பார்வை : 536

மேலே