வா ராசா

மொள்ளமாரி, மோடுமொட்டி
அராத்து, அடங்காப்பிடாரி
வெட்டிப்பய, தண்டச்சோறு என
ஆயிரமாயிரம் பேர்களிடம்
அவப்பெயர் வாங்கிட்டு
வீட்டுக்கு வந்தாலும்
அம்மா சொல்வாள்....
என்னை 'வா ராசா' என்று!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (13-Dec-14, 12:38 pm)
பார்வை : 96

மேலே