முத்தமும் , குத்தமும்

அம்மா தந்தாள் அருமை
மகனே என்று ஆசை முத்தம்
ஒன்று.

அன்போடு வளர்த்து என்னை
அலுவலகம் அனுப்பி நான்
வரும் வரை ஆவலோடு எதிர்பார்ப்பாள்.

இப்போது வந்தாள் எனக்கு..
என் வீட்டு அம்மா என்று
எடுத்ததிர்க்கெல்லாம் குத்தம்..

முத்தம் சில நாட்கள்
குத்தமே என் குடும்ப வாழ்க்கை
கூது குலம் இல்லை வாழ்கை.

அம்மா கொடுத்த முத்தம்
என்றும் என் மனதில்..
வீட்டம்மா கொடுத்த

முத்தமும் , குத்தமும்
என்றும்.என்றும்
என் உடலில் உயிரில்.. தீயாய்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (13-Dec-14, 12:40 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 91

மேலே