எடையூர் ஜெ பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எடையூர் ஜெ பிரகாஷ்
இடம்:  எடையூர்
பிறந்த தேதி :  26-Jun-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2013
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  175

என்னைப் பற்றி...

கவிஞர், பத்திரிகையாளர்.

என் படைப்புகள்
எடையூர் ஜெ பிரகாஷ் செய்திகள்
எடையூர் ஜெ பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 10:56 am

நன்றாய் வாழ்ந்தேன் என்கிற
வரிசையில் எனக்கு இடமில்லை...
வென்றாய் மகனே என்று சொல்ல
என் அன்னை உயிரோடு இல்லை...
கன்றாய் ஓடியும் கவியுலகை
இன்னும் தொடமுடியவில்லை...
நின்றாய் என்று சொல்லும்வரை
அதை நிறுத்தப் போவதில்லை....

மேலும்

இலக்கை அடைய முடியும் முயற்சி செய்தால்...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:39 pm
வாழ்த்துக்கள் !! 23-Apr-2016 12:55 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2016 11:04 am

வாக்காளக் குடிமகனே
எழுந்து வா...

வருங்கால தமிழகத்தை
ஆளப்போகும் மனிதரைத்
தேர்ந்தெடுக்கும் உரிமை
உனக்கும் இருக்கிறது!

அதை - உன் ஒற்றை விரலால்
உறுதி செய்...

உன்னாலும் ஒரு தலைவரை
உருவாக்க முடியும் என்பதை
உலகுக்குப் பதிவு செய்!

வாக்காளக் குடிமகனே
எழுந்து வா...

மேலும்

எடையூர் ஜெ பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2016 3:35 pm

தினம் ஒரு கீரையாம்...
தின்றால் உடல் திடமாகுமாம்!
திசை எங்கும் கிடைக்குமாம்...
தேன்போல இனிக்குமாம்!

தின்னத்தின்ன ஆசையாம்...
திகட்டாமல் இருக்குமாம்!
குழந்தைகூட உண்ணுமாம்...
குடற்புண்ணை விரட்டுமாம்!

கண்ணைப் பாதுகாக்குமாம்...
கை, கால் வலியைப் போக்குமாம்!
முடி உதிர்வதைத் தடுக்குமாம்...
மூலத்தையும் நீக்குமாம்!

சத்து பல நிறைந்ததாம்...
சக்தி அதிகம் கொடுக்குமாம்!
தினம் ஒரு கீரையாம்...
தின்றால் உடல் திடமாகுமாம்!

மேலும்

எடையூர் ஜெ பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2016 10:48 am

ஃபாஸ்ட் ஃபுட் நமக்கு எதற்கு?
ஃபர்ஸ்ட் கிளாஸ் உணவு இங்கிருக்கு...
புரோட்டாவையும் நூடுல்ஸையும் ஓரங்கட்டு...
புரோட்டினையும், வைட்டமினையும் உணவில் காட்டு!

பீட்சா, பர்கரும் உணவுக்குக் கேடு...
பெஸ்ட்டான சிறுதானியத்தைக் கையிலெடு...
ஃப்ரெஸ்ஸா காய், கனி சாப்பிடு...
பிரஸர், சுகர்கூட தூர ஓடிடும் பாரு!

கூல்டிரிங்ஸில்கூட கெமிக்கல் இருக்கு...
நம்ம ஊரு கூழபோல வேற என்ன இருக்கு?
கூலிங்காய் இளநீரும், மோரும் இருக்கு
அத குடிக்கலைனா நோய் அதிகமிருக்கு!

கண்டகண்ட உணவையெல்லாம் சாப்பிட்டு
காசு பிடுங்கும் டாக்டரிடம் நிக்கணுமா?
கட்டுப்பாடோடு நாம் இருந்தா
எல்லா நோயையும் விரட்டலாமே?

ஃப்ரியா மோசன் போ

மேலும்

அருமை 20-Jan-2016 2:33 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 3:51 pm

தெருவில்
தேனாய் வந்தவள்
தேளாய் காதலின்
முடிவைச் சொன்னாள்...

மேலும்

நன்றி தோழரே... 29-Oct-2014 4:16 pm
நல்லாருக்கு தோழரே.. 29-Oct-2014 8:13 am
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 12:09 pm

இனங்களில் மாறுப்பட்ட
மனங்களில் சிறைப்பட்ட
ஒரு புதிய மனிதப்பிறவி!

மேலும்

நன்றி தோழரே... 29-Oct-2014 4:14 pm
உண்மை தான் நட்பே... 28-Oct-2014 5:49 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 2:46 pm

மலர்கள் இட(ன)ம்
பார்த்து மலர்வதில்லை...
மழைத்துளி இட(ன)ம்
பார்த்து விழுவதில்லை...
ஆனால், மனிதா
நீ மட்டும் இடம் பார்த்து
நகர்வது ஏன்?

மேலும்

நன்றி தோழரே... 29-Oct-2014 4:12 pm
அருமை நட்பே...உண்மை தான் 28-Oct-2014 5:11 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2014 3:11 pm

ஆயிரமாயிரம் பேர்
சாதி மதம் இல்லாமல்
சகட்டுமேனிக்கு வயலில் இறங்கி
காலம் நேரம் பாராமல்
களைப்புக்குக்கூட உண்ணாமல்
சத்தான பயிர்களுக்காக களை பறித்த
பொன் விளைந்த பூமி - இன்று
அதே ஆயிரமாயிரம் பேர்களை
சாதி மதம் இல்லாமல் வரவேற்கிறது!
சாகடிக்கும் மருந்துகளை
விற்பனை செய்யும்
'டாஸ்மாக்' கடையாக!

மேலும்

நன்றி தோழரே... 29-Oct-2014 4:12 pm
அருமை நட்பே...உண்மையும் கூட 28-Oct-2014 5:04 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - அகத்தியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Oct-2014 1:58 am

வலி தரும் வாடிக்கையாளர்களே...!
தயவு செய்து என்னை,
பக்குவமாய் கையாளுங்கள்.
நான் சதை முளைத்த இரும்பல்ல....

எங்கள் அறையில்
வெளிச்சத்திற்கு விடுமுறை
கொடுத்தால் தானே,
இன்பத்திற்கு விண்ணப்பிக்க முடியும்

எந்த சாவியிலும் திறக்கும்,
கள்ள பூட்டுகள் நாங்கள்.

நீங்கள் தேக்கி வைத்ததையெல்லாம்
கொட்டி தீர்ப்பதால்,
நானும் ஒருவகையில்
குப்பை தொட்டி தானே..

நாங்கள் சுகம் தரவே
நேந்து விடப்பட்ட
விபச்சாரிகளே...

வாசம் வீசும்,
வண்ண மலர் நாங்கள்,
வாடுவதற்குள் வந்துவிடுங்கள்.....

ஒருமுறை வெந்நீரிலும்,
பலமுறை கண்ணீரிலும்,
ஒவ்வொருமுறை வியர்வையிலும்
அன்றாடம் குளிக்கின்றோம்...

மேலும்

மிக்க நன்றி அண்ணா... 29-Oct-2014 10:36 pm
நன்றி தோழரே... 29-Oct-2014 4:15 pm
அருமையான வரிகள் எதிர்ப்பு எதற்கு 29-Oct-2014 9:48 am
அடடா எதார்த்தத்தின் வெளி உலகம்... அருமை... 29-Oct-2014 8:53 am
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2014 11:34 am

நல்ல 'மவுசு'
நடிகைகளின் ஆடை குறைந்த
படங்களுக்கு.....

மேலும்

என் கவிதையை பாராட்டிய தங்களுக்கு நன்றி. 28-Oct-2014 11:49 am
அருமை 27-Oct-2014 1:39 pm
என்னுடைய கவிதைகளைத் தொடர்ந்து பாராட்டி வரும் தங்களுக்கு எனது நன்றி. 25-Oct-2014 4:15 pm
சரியாய் சொன்னீர் தோழரே... 25-Oct-2014 1:13 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2014 11:31 am

'ஆடையில்லாதவன்
அரை மனிதன்!'
அருமையாகப் பேசினாள்...
விழா மேடைக்கு
அரைகுறை ஆடையுடன் வந்த
கதாநாயகி!

மேலும்

என்னுடைய கவிதைகளைத் தொடர்ந்து பாராட்டி வரும் தங்களுக்கு எனது நன்றி. 25-Oct-2014 4:18 pm
அருமை... 25-Oct-2014 1:15 pm
எடையூர் ஜெ பிரகாஷ் - எடையூர் ஜெ பிரகாஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2014 11:25 am

நாலும் தெரியவேண்டும் என்பதற்காக
நாகரிகப் போர்வைக்குள் நுழைந்து
நசுங்கி விடாதீர்கள்...
நங்கைகளே!

மேலும்

என்னுடைய கவிதைகளைத் தொடர்ந்து பாராட்டி வரும் தங்களுக்கு எனது நன்றி. 25-Oct-2014 4:17 pm
நன்று... 25-Oct-2014 1:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே