எல்லாத்துக்கும் இங்கே உணவிருக்கு

ஃபாஸ்ட் ஃபுட் நமக்கு எதற்கு?
ஃபர்ஸ்ட் கிளாஸ் உணவு இங்கிருக்கு...
புரோட்டாவையும் நூடுல்ஸையும் ஓரங்கட்டு...
புரோட்டினையும், வைட்டமினையும் உணவில் காட்டு!

பீட்சா, பர்கரும் உணவுக்குக் கேடு...
பெஸ்ட்டான சிறுதானியத்தைக் கையிலெடு...
ஃப்ரெஸ்ஸா காய், கனி சாப்பிடு...
பிரஸர், சுகர்கூட தூர ஓடிடும் பாரு!

கூல்டிரிங்ஸில்கூட கெமிக்கல் இருக்கு...
நம்ம ஊரு கூழபோல வேற என்ன இருக்கு?
கூலிங்காய் இளநீரும், மோரும் இருக்கு
அத குடிக்கலைனா நோய் அதிகமிருக்கு!

கண்டகண்ட உணவையெல்லாம் சாப்பிட்டு
காசு பிடுங்கும் டாக்டரிடம் நிக்கணுமா?
கட்டுப்பாடோடு நாம் இருந்தா
எல்லா நோயையும் விரட்டலாமே?

ஃப்ரியா மோசன் போகலையா?
பீரியடு சரியா வரலையா?
உடல் எடையைக் குறைக்கணுமா?
உள்ளத்தைத் தூய்மையாக்கணுமா?

எல்லாத்துக்கும் இங்கே உணவிருக்கு...
எடுத்துத் தின்றால் பலனிருக்கு!

எழுதியவர் : எடையூர் ஜெ.பிரகாஷ் (20-Jan-16, 10:48 am)
பார்வை : 74

மேலே