வலி தரும் வாடிக்கையாளர்களே
வலி தரும் வாடிக்கையாளர்களே...!
தயவு செய்து என்னை,
பக்குவமாய் கையாளுங்கள்.
நான் சதை முளைத்த இரும்பல்ல....
எங்கள் அறையில்
வெளிச்சத்திற்கு விடுமுறை
கொடுத்தால் தானே,
இன்பத்திற்கு விண்ணப்பிக்க முடியும்
எந்த சாவியிலும் திறக்கும்,
கள்ள பூட்டுகள் நாங்கள்.
நீங்கள் தேக்கி வைத்ததையெல்லாம்
கொட்டி தீர்ப்பதால்,
நானும் ஒருவகையில்
குப்பை தொட்டி தானே..
நாங்கள் சுகம் தரவே
நேந்து விடப்பட்ட
விபச்சாரிகளே...
வாசம் வீசும்,
வண்ண மலர் நாங்கள்,
வாடுவதற்குள் வந்துவிடுங்கள்.....
ஒருமுறை வெந்நீரிலும்,
பலமுறை கண்ணீரிலும்,
ஒவ்வொருமுறை வியர்வையிலும்
அன்றாடம் குளிக்கின்றோம்...
பல கிறுக்கல்களால்
பயன்படாமல் போன
கசங்கிய காகிதம் நாங்கள்
அழுக்குத்தொட்டியில் விழுந்து
அழகுத்தொட்டியில் மலர்ந்து
குப்பைத்தொட்டிக்கு வீசப்படுகின்றது
பல பிஞ்சுகள்,
பாதுகாப்பற்ற உடலுறவால்.....
குப்பை தொட்டியை மலடியக்க...
அறிவுரை ஒன்றை சொல்லுகின்றோம்
வரும்போது ஆணுறையோடு வாருங்கள்...
எல்லாம் இறைவன் செயல் என்றால் ?
எல்லாம் விதி என்றால்....?
எல்லாம் தலையெழுத்து என்றால்...?
இந்நிலைக்கு காரணம் நாங்களல்ல...
ஆவேசமுடன் சொல்கின்றோம்,
எங்கள் வாழ்க்கை ஆபாசமானது...
குறிப்பு : இது பல விலைமகளின் கண்ணீர்
இதை அப்பட்டமாய் எழுதவே,
நான் விரும்பினேன்....
ஆகவே எழுதினேன்....