பெண்ணே unnaich சிந்தித்தல்

உன்னை சிந்தித்தால்
பெண்ணே !!
உன்னை சிந்தித்தால் சொல்லத் தோன்றுதடி கண்ணே!
உன்னால் முடியும் பெண்ணே !
கரிய இருள் உன்னால் விடியும் பெண்ணே !
புவியல் பல சாதனைகள் புரிபவள் நீ !
அன்பை புவியில் விதைப்பவள் நீ!
இப்பூவுலகை படைத்தவள் நீ!

நீரின்றி அமையாது உலகு !
நீயின்றி அமையாது இவ்வுலகு !!

உனக்கு பொறுமை அழகு !
அதை நீ என்றும் பழகு !!

பொறுமை என்றெண்ணி நான்கு சுவற்றிக்குள்ள்ளும்
அடுப்படிக்குள்ளும் கிடந்தது விடாதே ,
பரந்திருக்கும் இவ்வுலகம் உன் சாதனையைக்கண்டு வியக்க வேண்டும் மறந்துவிடாதே!!

பெண் சிசுவைக் கொள்ளும் கூட்டம்
உன்னை கண்டு நாண வேண்டும் !!

பாரதி தேடிய புதுமைப் பெண்ணாய் ,
பெரியார் தேடிய சரித்திரப் பெண்ணாய்,
நிமிர்ந்த நன் நடையுடனும் ,
நேர்கொண்ட பார்வையுடனும்
சென்றிடுவை பெண்ணே !
இவ்வுலகை வென்றிடுவாய் பெண்ணே !!

பெண்ணாய் பிறந்ததின் பெருமிதம் எண்ணெ !

எழுதியவர் : veNNiyammaaL.வே (27-Oct-14, 8:39 pm)
பார்வை : 177

மேலே