எல்லைகள்-கருணா

இன்பத்தின் எல்லைகள்
மறுபக்கம் இருக்கும்
துன்பத்தின் எல்லைகள்!
அதனால் ..
துன்பத்தின் எல்லைகள்
மறுபக்கம் இருக்கும்
இன்பத்தின் எல்லைகள்!
அதனால்..
ஒன்றின் முடிவில்
மற்றொன்று தொடங்கும்..!
இருளின் முடிவு
வெளிச்சம் என்றும் ..
வெளிச்சத்தின் மறைவு
இருளாகும்..
என்பதைப் போல்!
அதனால்..
மனமே ..
ஓட்டத்தை நிறுத்தாதே !

எழுதியவர் : கருணா (16-Dec-14, 2:25 pm)
Tanglish : ellaigal
பார்வை : 118

மேலே