முதல் காதல்

முற்றும் துறந்த....
முனிவனுக்கும்,
மறக்க முடியாதது...
முதல் காதல், என்றாய்!
அம்மாவின்....
பழைய புடவையை,
பாதியாய் கிழித்து.....
முதன்முதலாய் தாவணி... உடுத்தியதை மறக்க முடியாது என்றாய்!
நீ, பதியம் வைத்த ரோஜா செடியில்... முதன்முதலாய்,
மொட்டுவிட்டதை...
மறக்கமுடியாது என்றாய்! ஆனால் முதன்முதலாய்... சந்தித்த முதன்முதலாய்,.. சிந்தித்த என்னை, மட்டும் ஏன்... மறந்துபோனாய்?