மகாமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகாமூர்த்தி |
இடம் | : அந்தமான் தீவுகள் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 234 |
புள்ளி | : 64 |
விதைத்து வைத்த... விதைகள் எல்லாம், முளைப்பதில்லை
நீ.. போகும்பாதையில்....
ஒரு பக்கம் நெருப்பு,
அதை தொட்டு சுட்டு கொள்வாயோ?
மறு பக்கம் முள்புதர்...
அதில் மோதி,
உடலை கிழித்து.. கொள்வாயோ? இரண்டையும் தாண்டிச்சென்றால்.... நந்தவனம் என்ன செய்வது?
நிஜம் என்ற நெருப்பை...
கையில்எடு மாயம் என்ற முள்புதரை.... பொசுக்கிவிடு நல்ல, பாதைகிடைத்துவிடும்.
காதல்..
இருந்தாலும் வலிதான்..
பிரிந்தாலும் வலிதான்..
இருந்தால்..
காதலை எழுதியே..
வலிக்கின்றன கரங்கள்
பிரிந்தால்..
காதலை நினைத்தே..
வலிக்கின்றன மனங்கள்
ஆம்..
உண்மைக்காதல் கொண்ட..
இரண்டு மனங்கள்
கவிதை
கண்களில் தொடங்கி
காதலில் என்பாய்..
உலகம்
என்னில் தொடங்கி
உன்னில் என்பாய் ...
பரிசு
தலைமயிர் முதல்
தரிசான தாழ்வரை
வர்ணித்துக் கவி கொடுப்பாய்...
காற்புள்ளி அரைப்புள்ளிகளும்
வாசித்துப் பூரித்தாலும்
மேற்குறித் தவறியதாய்
பொய்யாக பிழை சுட்டுவேன்...
நீயோ
மேற்கொண்டு இருவரியேனும்
வர்ணித்திட வேண்டுமென
வார்த்தைகளோடு வம்பிழுப்பாய் ...
நீ என்னை
எழுதிட வேண்டும் எனக்கு
நான் உன்னை
வாசித்திட வேண்டும் உனக்கு..
நீ விரும்பும்
நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை .
பட்டத்து யானையும் பரிவாரமும் பொன் கட்டிலும் பூ மெத்தையும்
என் சொந்தமாய் இல்லை .
அடுக்கு மாடிகளும்
அதி சொகுசு வாகனமும்
ஆணையிட அடிமைகளும்
அள்ளி வீச வைரங்களும்
எனக்கானதாய் இல்லை .
கொஞ்சிடும் குரலும்
கோவைப்பழ இதழும்
சிவந்த முகமும்
கவர்ந்திடும் விழிகளும் என்னிடம்
இல்லவே இல்லை .
என்னிடம் இருப்பதெல்லாம்
தாலாட்டே கேட்காத செவிகளும்
கண்ணீரில் குளிக்கின்ற விழிகளும்
அன்பிற்காய் ஏங்கும் இதயமும்
தனிமைப் படுத்தப் பட்ட உள்ளமும் தான் .
உன் மௌனத்தின் பாஷைகள்
புரிகின்றது உயிரே
கடதாசி பூவி
தூரங்கள் ஒன்றும் நமக்கு புதிதல்ல
துயரங்கள் என்றும் எமக்குள்ளில்லை
கனிந்திடும் காலம் வரை காத்திருப்போம்
இருவர் கனவுகளை ஒன்றாய் வாழ்ந்திடவே...!!!
சிகரம் நோக்கி..
செல்ல இருந்தவர்களை,
கிரகம் என சொல்லி..
கட்டி போட்டீர்கள். சிலரை கூட...
செவ்வாய் தோசம் என..
சிறை வைத்தீர்கள்,
இன்று நாங்கள்..
செவ்வாய் கிரகமே,
சென்று விட்டோம்...
செவவாய் என்பது...
தேசமா?... இல்லை.
தோசமா?.. என.ஆராய்கின்றோம். சந்தோசம் என்றால்.. செவ்லாய் செல்ல. சிறகு வாங்கலாம்.
சிகரம் நோக்கி..
செல்ல இருந்தவர்களை,
கிரகம் என சொல்லி..
கட்டி போட்டீர்கள். சிலரை கூட...
செவ்வாய் தோசம் என..
சிறை வைத்தீர்கள்,
இன்று நாங்கள்..
செவ்வாய் கிரகமே,
சென்று விட்டோம்...
செவவாய் என்பது...
தேசமா?... இல்லை.
தோசமா?.. என.ஆராய்கின்றோம். சந்தோசம் என்றால்.. செவ்லாய் செல்ல. சிறகு வாங்கலாம்.
ஊன் அவிக்கவும்...
உனை எரிக்கவும...
வான் உயர்ந்து நின்ற,
வளமான மரங்களை...
வெட்டி வீழ்த்தி,
மேகங்களை....
மலடியாக்கி விட்டு,
மழை என்ற...
மழலையை,
பிரசவிக்க சொல்வது...
புரியாத நியாயம்.
மரம் இல்லாமல்...
மண் வளம் இல்லை
மழை இல்லை,
நீ.......
ஆக்ஸிசனை .
குடித்து விட்டு,
அமிலங்களை கக்குகிறாய்!
மரங்களோ,
நீ விடும்..
கெட்ட காற்றை....
குடித்து விட்டு,
உனக்கு நல்ல காற்றை
தானே தருகிறது.
வாழ்ந்தால் நீர்.,
வீழந்தால் நெருப்பு,
பஞ்ச பூதங்களை..
பையில் வைத்திருக்கும்.
பூமரங்களை வெட்டி,
பாவி மனிதா..
பஞ்ச பூதங்களின்,
அம்சங்களான நீ... உன்
அவயங்
கடந்த காலத்து...
கனவுகளையும், கண்ணீர் துளிகளையும். தனக்குள் .... வாங்கி. வாங்கி தலையணை... கனத்து போனதடி! நடந்து சென்ற... நந்தவனத்தின், நிழல் மரங்கள் எல்லாம் நீ இல்லாமல். காதலின். நினைவு சின்னங்களாய், தெரியுதடி! அன்று... கண்ணீர் அணை, உடைந்து... கனவுகள் கலைந்த போது தான், தெரிந்தது.... தொலைந்தே போனது, என் காதல் என்று!
காதல் வளர்த்து கணவனான காதலா!
கனவுகளில் சில காட்சிகள் வருகிறது
கலைத்துவிட்டு எழுகையில் கண்ணீர் விழுகிறது
காலம் கடத்தாமல் காஷ்மீர் வருகிறேன்
அலைபேசி வழியே அன்பை பகிர்ந்து
அன்றாடம் என்னை அழவைப்பவனே!
போர்முனை விடுத்து நீ வந்தால்-நம்
தலைமுறைக்கு நாடில்லை நானே வருகிறேன்
தோட்டாக்கள் துரத்தி வரும் போதும்
உன் தோள் சாய என்னால் முடியும்
குண்டுகள் கூரையாக மாறும் போதும்
குடித்தனம் நடத்த என்னால் இயலும்
சுவாசிக்க காற்று இல்லாத போதும்
உன் வாசத்தில் வாழும் நிம்மதி போதும்
அமைதியின் அடையாளம் அழியும் போதும்
அன்றிலாய் நாம் வாழ்ந்தால் போதும்
உன்னையும் மண்ணையும் உயிராய் நினைப்பவள்
உன் இருப
சிகரெட் பெட்டிகள்...
சின்ன சின்ன. சவபெட்டிகளல்லவா? அதை... உன்,
சட்டை பையில் ஏன்?
சுமந்து கொண்டிருக்கிறாய். தம் என, சொல்லிக்கொணடு..
தனக்கு தானே..
தினம் தினம்,
தவணை முறையில்...
கொள்ளி வைத்து உனை கொல்கிறாய்.
சிகரெட்டை கொளுத்தும்
சின்ன தீ குச்சிகளை..
சிறிது நேரம் பார், .
சின்ன பெட்டியில்.
உனை எரிக்க அடிக்கி.. வைத்திருக்கும்...
விறகு கட்டைகளாய் தெரியும்.
இறுதிவரை இன்பம் என, இழுத்து.. இழுத்து.
நெருப்பு உன்னை...
நெருங்கி கொண்டிருக்கிறது..
நினைவிருக்கட்டும்.
ஆஷ்ட்ரேயில்
அடிக்கடி விழும்...
அந்த சாமபல்கள், உன்,
அஸ்தியின் சேம்பிள்கள். ஆக கூட இருக்கலாம்.
ஆஷ்ட்ரே கூட உன், அஸ்தி கலயமாகலாம்.