மகாமூர்த்தி- கருத்துகள்
மகாமூர்த்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [10]
அருமை சக்திமிக்க.. அருமை, அப்பாவிற்கு
பிள்ளை தப்பாது.. அப்பாவிடம்.. உள்ள ஏக்கள் அனைவரையுமே ஏங்க வைத்து விட்டது. வாழ்க வளமுடன்.. நானும் நலமுடன்.
மாலை வந்தால்... வாடி போகும், என தெரிந்தே பூக்கும் பூக்களில் காதல் பூவும் ஒன்று.
பொய்யாய் புனையப்பட்ட. புதுக்கவிதையும்.,. பக்குவம் இலலாத. பருவக்காதலும்... மெய்ப்பொருள் காணவே துடிக்கினறன.
கயல் ஒனறு... (க)வலையில் துடிக்கிறது. கண்ணாடி தொட்டியில் கலர் கலராய் மின்னும் மீன்கள் அழகாய் நீந்துவதாய் எல்லோரும் நினைக்கிறோம். அழுகையோடு நீந்துவது யாருக்கு தெரியும். அதற்காக அதை கை(யில்) பிடித்தாலும் உயிர் விடும், விடுதலை தர எண்ணி தொட்டியை உடைத்தாலும் உயிர் விடும். காதல் எனபது இது தானோ கயல்?
தூரம் என்பதே,. துரத்தி பிடிக்க தானே. துவண்டு போக அல்ல. வானமே எல்லை. என வெற்றியை தேடி சென்றவர்கள் விண்வெளி சென்று வானமே இல்லை அது வெற்று வெளி என சொல்கிறார்கள். துயரம் என்பதை வலி என கொள்ளலாமா? வலி இலலை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் வலிமையும்... வளமையும் வலியில் தானே சிறப்படையும். ஒவ்வொறுவரும் கனவு காண வேண்டும்.எதிர் காலம் சிறப்படைய, ஆனால் அந்த கனவு இரவில் காணும் கனவல்ல விழித்திருக்கும் வழிக்குள் இருக்க வேண்டும். நெஞ்சுக்குள் நீருபூத்த நெருப்பாய் இருக்க வேண்டும். வெற்றி நிச்சயம்.. வாழ்க வளமுடன்.. நாளும் நலமுடன்.
விழி பெயர்த்து வழிகின்ற கண்ணீரை மொழி பெயர்க்க தெரிந்தவள். அன்னம் உண்ணும் அழகு பார்த்தே, பசி அமருவாள்.
கடவுள் பக்தானாய் மாறி கெஞசி கொண்டிருக்கிறார். தீர்மானங்கள் வைக்காத பகதனை தா என..
தனியாக நான் பேச வில்லை... தனிமையோடுதான் பேசுகின்றேன், தனிமை என்பது உன் நினைவுகள் தானே, தனியாக நான் இல்லை தனிமையின் துணையோடு தான் இருக்கின்றேன். தனிமை என்பது உன் நினைவலைகள் தானே.
கையில்லா ஊமையன், வெண்ணை உனங்கள் போல.. காதல் கொணடார், துடிப்பார் வார்த்தை தொணடை வரை வந்து உள்ளுக்குள் வழுக்கி விழுந்து தற்கொலை செய்து கொல்லும்.. கொல்லும் தானே? (புலவர்கள் மன்னிக்கவும்)
மொழி வாரியாக மாநிலங்களையும். சாதி வாரியாக மாவட்டங்களையும் பிரிக்காமல் இருந்திருந்தாலே. இரண்டும் ஒழிந்திருக்கும். இந்த அந்தமானை பாருங்கள் அழகு, இங்கு எல்லா மாநிலத்தவரும் உள்ளனர். எல்லா மொழியும் உண்டு சாதிகள் இல்லை. அது கலப்பு திருமணங்களால் ஒழிந்தே விட்டது. மதம் உண்டு ஆனால் அதற்கு மதம் பிடிப்பதில்லை. எல்லா மதமும் சம்மதமே.
அவர் வைய்யிர முத்து அல்ல. வைரம் பாய்ந்த முத்து எல்லாம் பொருத்து கொள்வார். வருத்தம் வேண்டாம் தோழி.. நீங்களும் வைரம் பாதி.. பாரதி பாதி கலந்து செய்த உருவம். ஆனால் விளங்க முடிந்த கவிதை.
சில நேரம், சொல் என்ற.., கல்லால். சமையல் அறையில்.. கல்லறை கட்டி விடுவார்கள். உன் சாம்ராஜ்யம் என்பார்கள். சில நேரம் முள் என்ற பூவெடுத்து சூடி விடுவார்கள். கேட்டால் கிரீடம் என்பார்கள்.
மூக்கை பிடித்துக்கொண்டு சாக்கடையை சிலர் தாண்டி செல்கின்றனர். ஒரு சிலர் நாற்றம் பழகி அதன் ஒரமாய் நடந்து செல்கின்றனர், தாண்ட நினைத்து தவறி விழுவதும் உண்டு. அதில் புரழும் பன்றிகள். நாய்கள் மீது கல் எறிவதால் என்ன பயன்?, குற்றம் சொல்ல ஆயிரம் பேர்.. சாக்கடையை இறங்கி சுத்தம் செய்வது யார்???
தலைகோதும் விரல்கள், தழுதழுக்கும் குரல், தோள் சாய துணை. தலை சாய மடி. தவம் இருப்பதெல்லாம் இந்த வரம் வேண்டி தானே,
வலிக்கிறது.. எல்லாம் உள் காயங்கள். ஊமை காயங்கள். வார்த்தை அமிலங்கள். விளக்க முடியாத அவலங்கள். உறவுகள் சில நேரம் விலங்காகி பூட்டி வைக்கும். பல நேரம் விலங்காகி கடித்து குதறி விடும். நட்பு என ஒரு நேரம் நெருங்கி வரும், நகம் கொண்டு அகம் கீறி நடுங்க வைக்கும். உளளம் எல்லாம வலிகளாய் இருந்தாலும்.. வேறு வழிகள் இல்லாமல் உதட்டில் புன்னகை சாயம் பூசிக்கொண்டு எல்லாம் நடித்துக்கொண்டிருக்கிறோம். உண்மையான வரிகள்.
நேற்றைய நினைவுகளை கிழித்து போடு.. இன்றைய நிஜங்களை நினைத்து பார். நாளைய கனவுகளையும் புரட்டி பார்க்காதே என பாடம் சொல்லும் பாடை அல்லவா, அருமை. தொடர வாழ்த்துகள்.
பதியம் வைத்து பார்த்திருப்பாய். முதன்முதலாய் மொட்டு புன்னகைத்ததை மறந்திருக்க மாட்டாய். அதன் பின் அந்த பூ யாரை பார்த்து புன்னகைக்குமோ? யாருக்காக பூத்ததோ? யார் பறிப்பாரோ? யாரறிவாரோ?
உழைப்பவன், ஒருவன். பிழைப்பவன், ஒருவன். உழைத்து களைப்பவன். இவன். அதனால் செழித்து களிப்வர்கள் அதிகம்.. தன் குடுமபத்தின் அன்பையும், தன் பிள்ளைகளின் கனவுகளையும் அவன் சுமைகளோடு சேர்த்து சுமப்பதால் கனப்பதில்லை இவனுக்கு.
வைரமுத்துவின்.. போதி மரத்தில் தொங்கவிடப்பட்ட தோரணங்கள். தொடர்ந்து சென்று காரணம் கேட்டேன். பூமியில் வேடர்கள்... வேடமிட்டவர்கள் விரித்திருக்கும் வலைகளில் விழுவதை விட, இறக்கை வலித்து விழுவதே மேல் என சொன்னது.
நிலவரசிக்கு.. நித்தம் நித்தம் தங்க பூக்களை, தூவி செல்வது யாரோ? நிலவில் அமர்ந்தவனுக்கு.. நல்ல கவிதை உதித்தது. தங்க மை நிரப்பிய பேனா தான், ஆனால் எழுத மறுக்குது.. உதறிக்கொண்டே இருக்கிறான் அந்த கவிஞன், யாரவன்? இவராகத்தான் இருப்பார் என நான் நினைக்கிறேன்.