மன்னிக்கவும் வைரமுத்து

கடவுள் பாதி,,,,,,,,,,,,, மனிதன் பாதி
கலந்து செய்த கலவை நான்

வெளியே மனிதன் ........உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்.........

கடவுள் கொன்று ........ கடவுள் கொன்று
மனிதம் வளர்க்க பார்க்கின்றேன்.........ஆனால்

மனிதம் கொன்று ...உணவாய் தின்று
கடவுள் மட்டும் வளர்கிறதே .........

நந்த குமாரா.நந்த குமாரா......நாளை கடவுள் கொல்வாயா?
கடவுள் கொன்ற எச்சம் தின்று.....மீண்டும் மனிதம் செய்வாயா?
குரங்கிலிருந்து மனிதன் என்றால் .......மனிதன் மிருகம் உணர்வாயா?
மிருக சாதியில் பிறந்த மனிதா ..ஆறாம் அறிவை வளர்ப்பாயா?

நந்த குமாரா............

கடவுள் பாதி ...........மனிதன் பாதி
கலந்து செய்த கலவை நான்
வெளியே மனிதன் .......உள்ளே கடவுள்
விளங்க முடியா .......கவிதை நான் ........

கடவுள் கொன்று .....கடவுள் கொன்று
மனிதம் வளர்க்க பார்க்கின்றேன் ......
மனிதம் கொன்று உணவாய் தின்று
கடவுள் மட்டும் வளர்கிறதே..........!

கடவுள் பாதி ...........மனிதன் பாதி
கலந்து செய்த கலவை நான்

இறைவன் தேடி....இறைவன் தேடி
மனிதம் கொல்லும் மிருகம் நான் ........[2]

ஒவ்வொரு போரும்,ஒவ்வொரு போரும்
மத போர் என்று ஆகிறதே!

மத போர் எல்லாம் வெல்லும் போது
மனிதம் மட்டும் சாகிறதே...........!


நந்த குமாரா.......நந்த குமாரா.....மதத்தை கடந்து வருவாயா?
மதங்கள் சொல்லும் தத்துவம் எல்லாம் மனிதம் வளர்க்க அறிவாயா?
மனிதம் புதைத்து கடவுள் வளர்க்கும் வித்தை கண்டவன் நீ தானே!
மிருகம் .மிருகம் உன்னிலும் உயர்ந்தது மதங்கள் அதற்கு கிடையாதே!

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (30-Dec-14, 1:03 pm)
பார்வை : 280

மேலே