விவகாரத்து வேண்டாம்

விவகாரத்து வேண்டாம்

வாழ்வது ஒரு முறை
வாழ்ந்து விடு முறையோடு
வாழ்ந்தால் உன்னோடு
வாழ்ந்திடுவோம் அன்போடு.

வசந்தமாய் நாம் வாழ
வந்து விடு என் அருகே
வற்புறத்தி சொல்லி விட்டேன்
வந்து விடு மீண்டும் நீ..

விவகாரத்து வேண்டாம் இங்கே
விஷமங்கள் கூடி நம்மை
விரிசலாய் நம்மை பிரித்து
விவரித்து பார்க்கிறதே.

குடும்பத்தில் குறை இருந்தால்
குறைத்து கொள் உன் கோபத்தை
குறை எல்லாம் நிறையாக
எண்ணியே என்னோடு வாழ்ந்து விடு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Dec-14, 12:58 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 87

மேலே