திருமணம்

இன்றைய காலத்தின் திருமணத்தின் நோக்கம்,
"வயது வந்துவிட்டது ,போனால் திரும்பி வராது".
இந்த காரணம் கொண்டு தான்,
நம் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம்.
எந்த வீட்டிலும்,
பிள்ளைகளிடம் உட்கார்ந்து,
திருமணம் பற்றி யாரும் பேசுவதில்லை.
செக்ஸ் ,குழந்தை பெற்று கொள்வது ,
மட்டும் தான் வாழ்க்கையா ????
இதனையும் தாண்டி,
அழகான ஓர் காதல் ,
அந்த காதலில் வசிக்கப்போகும் நட்பு,
அந்த நட்பில் ஏற்படும் புரிதல்கள்,
அந்த புரிதலில் தோன்றும் இன்ப துன்ப நிகழ்வுகள்,
அதில் விட்டுக்கொடுத்து வாழும் ,
மீண்டும் ஒரு அழகிய காதல் என ,
எத்தனையோ நிகழ்வுகள்,
அந்த வாழ்க்கையில் காத்து கிடக்கிறது.
இனிமேலாவது,
செக்ஸ் குழந்தை பெறுதல் மட்டும் தான்,
வாழ்க்கை என்பதை மறந்து,
வாழ்க்கையை,
ஆழமாக புரிந்து கொள்ளவும்,
கற்பிக்கவும் முற்படுவோம்.

எழுதியவர் : மோகன்குமார் (30-Dec-14, 12:40 pm)
Tanglish : thirumanam
பார்வை : 104

மேலே