யாரு வரப்போறாங்க புள்ள

எம்பிட தம்பி செய்த
கொந்தராத்து ரோட்டெல்லாம்
மழையோடு கரைஞ்சு
குமிளியாகி காணமல்
போய்ட்டு புள்ள
வடிச்சல் வாய்க்காலும்
காணாத்த காசுபோல
தொலஞ்சு ராமர் பாலமாய்
சரித்திரத்தில்
சஞ்சரிக்கப்போகுது புள்ள

தேர்தலோடு எம்பிமாரும்
எமாற்றிப்போறாங்க
நம்ம ஏழ்ம மட்டும்
ஏமாறாமல்
ஏணியிலே ஏறுதே புள்ள

ஒவ்வொரு தேர்தலிலும்
நம்மை ஏமாற்டிபிளைக்கும்
இந்த வியாபாரிகளை
நம்ம மடச்சனகள்
எப்ப புள்ள
புரியப்போகுது

நம்ம வறுமையை
கழுவி விட்டு
கண்ணீரில் கரையும் நமது
கனவுகளை
கரைசேர்க்க
கனவான்
யாரு வரப்போறாங்க புள்ள

UL . அலி அஷ்ரப்

எழுதியவர் : பாலமுனை UL . அலி அஷ்ரப் (30-Dec-14, 12:34 pm)
பார்வை : 51

மேலே