தனிமை

ஒரு நொடிக்குள் வந்துபோகும்
ஒரு கோடி எண்ண அலைகள்
அனைத்தும் உன்னையே
சுற்றிவர தனிமையாய்
உணர்கிறேன் நான்

நம் அன்பில் விளைந்த
நம் குழந்தை அம்மா
எனும்போது மீண்டு வருகிறேன்
நிகழ்காலத்திற்குள்

எனக்கு துணையாய்
உன் நினைவும்
நம் மழலையும்
நீ வரும்வரை.

எழுதியவர் : கௌதமிதமிழரசன் (17-Mar-14, 1:01 pm)
Tanglish : thanimai
பார்வை : 174

மேலே