விருந்தும் கசக்குமோ
உடன் பிறப்புகள் உடனிருக்க
மழலைகள் இரண்டும் மடியிலிருக்க
அறையெங்கும் ஆரவாரம்
அமைதியாய் நான்
வெறுமையாய் ஓர் உணர்வு
இப்படி ஓர் சோகத்தின் உச்சத்தை
அடைந்ததே இல்லை இவ்விடத்தில்
ஏனெனில் இது என் பிறந்தகம்
என் தாய்வீடு
வெந்தய குழம்பும் ஆம்லெட் தான் பிடிக்கும்
எனக்காய் சமைக்கும் அம்மாவும்
வீட்டு வரவு செலவுகளை
சொல்லி கொண்டிருக்கும் அப்பாவும்
அவரவர் வீட்டு கதைகளை
பேசிகொண்டிருக்கும் அக்கா தங்கையும்
ஒரு பொம்மைக்காய் அடித்து கொள்ளும்
என் வீட்டு சிட்டுகளும்
சற்று போரடிப்பதேன்?
எதோ ஒரு தனிமை
எதோ ஒரு வெறுமை
காரணம் என்ன?
என்னகுள்ளே ஓர்ராயிரம்
ஆராச்சிகள்
முடிவுகள் அனைத்தும்
சொல்வது
"என்னவன் என் அருகில் இல்லை"