நான் கடவுள்
இன்று எனக்கு விசேஷ பூஜையாம்
விளக்குகள் பல ஏற்றி
பாலும் நெய்யும் சிந்தி
பக்தர்கள் பலர் என்முன்
ஆயிரக்கனக்கானோர் என் ஆலயம் தேடி
விழிமூடி வழிபடும்
அழகை காண்கிறேன்.
முனுமுனுப்பும் சலசலப்பும்
எல்லோர் மனதிலும்.
-எம்.பி.பி.ஸ் சீட் வேணுமாம்
எந்நாளும் டி.வி யே கதியாய்
கிடக்கும் பனீரெண்டொம்
வகுப்பு பையனுக்கு
20 வயதில் இப்படி ஓர் பக்தியா?
அசந்து போய் பார்த்தேன் அவளை-
மணமுடிக்க ஆசையாம்
மற்றொருத்தி மணாளனை
பச்சை கலர் டி.ஷர்டும் ,ஜீன்ஸ் பேண்டும்
என்னிடம் வேண்டுவது என்ன?
பக்கத்தில் போய் கேட்டேன்_
ஐம்பதாயிரம் சம்பளம் வேண்டுமாம்
பணியமர்ந்த ஐந்தே மாதத்தில்
ஆஹா! நெற்றி நிறைய விபூதி
யார் அவர் என்ன வேண்டும் அவருக்கு
அருகில் போய் ஆராய்ந்தால்
அது வழிப்பறி கொள்ளையன்
தள்ளாத வயதில் தாவி வரும்
இளைஞரை கண்டேன்
மனம் மகிழ்ந்தேன்_
அவருக்கும் 3 ஏக்கர் நிலத்தில்
30 ஏக்கர் பலன் வேண்டுமாம்
நான் கேட்டேன் எனக்கொரு
பக்தன் வேண்டும்
_ஒழுக்கமானவனாய்
_உழைப்பாளியாய்
_அதிகம் ஆசைபாடாதவனாய்
_நேர்மையனவனாய்
_பொதுநலகாரனாய்
ஆசை இல்லா யாரும் வருவதில்லை
ஆலயம் தேடி
நான் என்ன தரகரா?
உண்டியல் என்ன ஊழல் பெட்டியா?
கோபத்துடன் கோவில் விட்டு வெளியேறினேன்.
அப்போது ஆறுகால் பூஜை முடித்துவிட்டு
ஐயர் எங்கு செல்கிறார்?
பார்க்க ஆசைதான் ஆயினும்
பக்குவமாய் விலகி நின்றேன்.
i