உன் அம்மா

"அம்மா" என நீ பேச ஆரம்பிக்கும் போதெல்லாம்
முடிக்க அரைமணி நேரமாகிறது.
மௌனத்துடன் இருக்கும் என்னை
"என்ன"என்பது போல் பார்ப்பாய்

ஆரம்பித்தால் அரைநாள் ஆகும் பரவாஇல்லையா ?
என்பேன்:எழுந்து சென்று விடுவாய்

வேரின் ஆழம் விழுதுக்கு தெரியும்போது
மண்ணுக்கு புரியாமலா போகும்
உன்னை கருவாய் சுமந்தவள்
என் தாயினும் மேலானவள் என்பேன் மனதிற்குள்.

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (20-Mar-14, 12:28 pm)
Tanglish : un amma
பார்வை : 216

மேலே