இப்படி நாம் காதலிப்போம்பொங்கல் கவிதை போட்டி 2015

காதல் வளர்த்து கணவனான காதலா!
கனவுகளில் சில காட்சிகள் வருகிறது
கலைத்துவிட்டு எழுகையில் கண்ணீர் விழுகிறது
காலம் கடத்தாமல் காஷ்மீர் வருகிறேன்

அலைபேசி வழியே அன்பை பகிர்ந்து
அன்றாடம் என்னை அழவைப்பவனே!
போர்முனை விடுத்து நீ வந்தால்-நம்
தலைமுறைக்கு நாடில்லை நானே வருகிறேன்

தோட்டாக்கள் துரத்தி வரும் போதும்
உன் தோள் சாய என்னால் முடியும்
குண்டுகள் கூரையாக மாறும் போதும்
குடித்தனம் நடத்த என்னால் இயலும்

சுவாசிக்க காற்று இல்லாத போதும்
உன் வாசத்தில் வாழும் நிம்மதி போதும்
அமைதியின் அடையாளம் அழியும் போதும்
அன்றிலாய் நாம் வாழ்ந்தால் போதும்

உன்னையும் மண்ணையும் உயிராய் நினைப்பவள்
உன் இருப்பிடம் தேடி வருகிறேன்
வரவேற்க வரும் தேசத்தின் காதலா!
எனக்கும் இராணுவ உடை கொண்டுவா!

இனி இப்படி காதலிப்போம்
மலரோடு முள்ளையும் நேசத்தோடு தேசத்தையும்
மரணம் நம்மை அழைக்கும் போது
மடியும் வரை மண்ணையும் காதலிப்போம்...


*************************************************************************************************************************************************************
இந்த கவிதைக்கு நானே முழு உரிமையாளரென்று உறுதி அளிக்கிறேன்.

பெயர்: வீ. சீதளாதேவி.
வயது: 20.
வதிவிடம்: 1/15,மெயின்ரோடு,
அன்னவாசல்,
சேங்காளிப்புரம் அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
612 604.

நாடு: இந்தியா(தமிழ்நாடு).
அழைப்பிலக்கம்: 887 005 7196.

*************************************************************************************************************************************************************

எழுதியவர் : வீ. சீதளாதேவி (13-Jan-15, 9:50 pm)
பார்வை : 88

மேலே