இப்படியும் காதலிப்போம் -பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி 2015
அருட்காதல் கொண்டார் அருளாளர் ஆனார்
போருட்காதல் கொண்டார் பொருளாளர் ஆனார்
மருட் காதல் கொண்டார் மயக்கத்தில் ஆழ்ந்தார்
எப்படிக் காதலிப்போம் என்றேங்கி நிர்ப்போரே..
இப்படியும் காதலித்து இன்புற்று வாழ்வோம் !!
தாய்மையைக் காதலிப்போம்-தாய்தரு
வாய்மையைக் காதலிப்போம் -வளந்தரு
தூய்மையைக் காதலிப்போம் -தொல்லுலகின்
சேய்மையைக் காதலிப்போம் - செழுமைசேர்
மரங்களைக் காதலிப்போம் -மனப்பயிரின்
தரங்களைக் காதலிப்போம் -தன்னுடல்
உரங்களைக் காதலிப்போம் -உழைக்கும்
கரங்களைக் காதலிப்போம் -கனித்தமிழ்
மொழியினைக் காதலிப்போம் -மொழியுணர்
விழிகளைக் காதலிப்போம் -விழுமிய நல்
வழிகளைக் காதலிப்போம் -வான்மழைத்
துளிகளைக் காதலிப்போம் -துணைவரும்
பெண்மையைக் காதலிப்போம் -பேணியவர்
மென்மையைக் காதலிப்போம் -மென்மையாய்
நன்மையைக் காதலிப்போம்-நல்லோரின்
இன்மையைக் காதலிப்போம்-எளிமையை
எழ்மையை இகழாமல் காதலிப்போம்
இப்படி நாம் காதலித்தால் இடரொன்றும் இல்லை
இன்பமே என்றும்
துன்பம் ஒன்றும் இல்லை...
என்றும் .....என்றென்றும்
------------------------------------------
இந்த படைப்பு என் சொந்த படைப்பு
ஜீவன்மணி
19 பிரணவம்
7வது வார்டு
மின்நகர்
குற்றாலம்
திருநேல்வேலி மாவட்டம்