தைபொங்கல் -உழவர் திருநாள்
ஏர் கொண்டு இப்பூமி
வேர் கொள்ளசெய்திட்ட
விவசாய தொழிலாளர் தினம்
விதை போட்ட உம்வாழ்வு
விளையாமல் போனதால்
பசியோடு நடமாட்டம் தினம் தினம்
விலைவாசி உயர்ந்தாலும்
விவசாயி உயரலையே
விளைவித்த பொருளுக்கு- நீயே
விலைவைக்கும் நாள்வந்தால்
உயரலாம் உம்வாழ்வு உலகிலே
உண்மையில் இயற்கையின்
புதல்வர்கள் இவர்களே
இயற்கையின் அனர்த்தங்கள்
இடறி போயினும் இயற்கையை
அணைத்தவர்கள்
விவசாயி பெருமையை
விளங்கிய தமிழன்
வருடத்தின் முதல்நாளில்
நன்றிசொன்னான் தை பொங்கலால்
கனலிக்கும் களனிக்கும்
மூடநம்பிக்கை மதநம்பிக்கை என
முடிவு கட்டாமல் முயல்வோம்
நன்றிசொல்ல தமிழராய் .