சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் போட்டிக் கவிதை

மனித இனம் என்பது ஒன்றேதான்
கொடிய சாதிகள் வகுத்தது மனிதன்தான்!
சாதியை ஒழிப்போம்! மதத்தை அழிப்போம்! (3)

இட்டார் ஒரு சாதி
இடாதார் மறுசாதி
இட்டார் ஆக்குதல் இயற்கையின் நீதி! (6)

பணம் படைத்தவர் ஒரு சாதி
பணம் அற்றவர் மறு சாதி
பணத்தை அளித்தல் அரசின் நீதி! (9)

கல்வி படைத்தவர் ஒரு சாதி
கல்வி அற்றவர் மறுசாதி
கல்வி அளிப்பது அரசின் நீதி! (12)

வலிமை உற்றவர் ஒரு சாதி
வலிமை அற்றவர் மறு சாதி
வலிமை பெறுவது மனத்தின் நீதி! (15)

நோயற்றிருப்பவர் ஒரு சாதி
நோயுற்றுருப்பவர் மறுசாதி
உடல்நோய் தீர்ப்பது அரசின் நீதி! (18)

நிலம் படைத்தவர் ஒரு சாதி
நிலம் அற்றவர் ஒரு சாதி
நிலம் அளிப்பது அரசின் நீதி! (21)

மதம் பிடிப்பது யானைக்குத் தீது
மதம் கொள்வது மனிதனுக்குத் தீது
மதத்தை அழிப்பது மனத்தின் நீதி! (24)

எழுதியவர் : என் வி சுப்பராமன், சென்னை (14-Jan-15, 6:15 am)
பார்வை : 73

மேலே