சின்ன சின்ன சவப்பெட்டிகள்
சிகரெட் பெட்டிகள்...
சின்ன சின்ன. சவபெட்டிகளல்லவா? அதை... உன்,
சட்டை பையில் ஏன்?
சுமந்து கொண்டிருக்கிறாய். தம் என, சொல்லிக்கொணடு..
தனக்கு தானே..
தினம் தினம்,
தவணை முறையில்...
கொள்ளி வைத்து உனை கொல்கிறாய்.
சிகரெட்டை கொளுத்தும்
சின்ன தீ குச்சிகளை..
சிறிது நேரம் பார், .
சின்ன பெட்டியில்.
உனை எரிக்க அடிக்கி.. வைத்திருக்கும்...
விறகு கட்டைகளாய் தெரியும்.
இறுதிவரை இன்பம் என, இழுத்து.. இழுத்து.
நெருப்பு உன்னை...
நெருங்கி கொண்டிருக்கிறது..
நினைவிருக்கட்டும்.
ஆஷ்ட்ரேயில்
அடிக்கடி விழும்...
அந்த சாமபல்கள், உன்,
அஸ்தியின் சேம்பிள்கள். ஆக கூட இருக்கலாம்.
ஆஷ்ட்ரே கூட உன், அஸ்தி கலயமாகலாம்.