சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”

ஆதியில் முளைத்த சாதியில்
பாதி சதி,மீதி விதி
விதை போட்டவன் விருந்தாளி-அதில்
சதை போட்டவன் சாமர்த்தியசாலி.

சிலைக்கு சாதியிலே வர்ணம் பூசினாய் - கௌரவ
கொலையிலே அதையும் மிஞ்சினாய்.
கலையிலும் கலப்படம் செய்தாய் சாதியை - எந்த
நிலையிலும் நீ மாறாயோ............

குருதியும் ஒன்றுதானே -நமக்கு
இறுதியும் ஒன்றுதானே ...
உறுதியுடன் இருந்தால் - சாதியை
கருதி செய்யும் சடங்கிற்கு சாட்டையடி கொடுப்போம்.


===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி -பெ.சு.ஆறுமுகம் வயது 37. த/பெ,சு.பெ.சுந்தரராஜ்,ஒக்கரைப்பட்டி(அஞ்சல்)கண்டமனூர் (வழி),ஆண்டிபட்டி(தாலுகா).தேனீ மாவட்டம்.
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 7373546087

எழுதியவர் : பெ.சு.ஆறுமுகம் (obilee) (10-Jan-15, 8:20 am)
பார்வை : 136

மேலே