பஞ்சபூதங்கள்

ஊன் அவிக்கவும்...
உனை எரிக்கவும...
வான் உயர்ந்து நின்ற,
வளமான மரங்களை...
வெட்டி வீழ்த்தி,
மேகங்களை....
மலடியாக்கி விட்டு,
மழை என்ற...
மழலையை,
பிரசவிக்க சொல்வது...
புரியாத நியாயம்.

மரம் இல்லாமல்...
மண் வளம் இல்லை
மழை இல்லை,
நீ.......
ஆக்ஸிசனை .
குடித்து விட்டு,
அமிலங்களை கக்குகிறாய்!
மரங்களோ,
நீ விடும்..
கெட்ட காற்றை....
குடித்து விட்டு,
உனக்கு நல்ல காற்றை
தானே தருகிறது.
வாழ்ந்தால் நீர்.,
வீழந்தால் நெருப்பு,
பஞ்ச பூதங்களை..
பையில் வைத்திருக்கும்.
பூமரங்களை வெட்டி,
பாவி மனிதா..
பஞ்ச பூதங்களின்,
அம்சங்களான நீ... உன்
அவயங்களை...
தனக்கு தானே
வெட்டி கொண்டிருக்கிறாய்!
மரம் புலம்புகிறது,
மனதிற்குள்...
எவர் எவரையோ...
எரிப்பதற்கு,
என்னை வெட்டி விட்டு.
நீர் கொடு,
நிழல் கொடு என...
நிலைகெட்ட மனிதன், நிர்கதியாய்.... நிர்கின்றான் பார் என்று.

எழுதியவர் : மஹாமதி (5-Feb-15, 5:21 am)
Tanglish : panchapoothankaL
பார்வை : 341

மேலே